[X] Close
 

இவ்வளவு பயந்தாங்கொள்ளி சிங்கத்தை இதுவரை நாம் பார்த்ததில்லை: ஆர்.எஸ்.எஸ்-ஸை கலாய்த்த சுபவீ


suba-vee-slams-mohan-bagwat

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Sep, 2018 10:45 am
  • அ+ அ-

"இந்து மதத்தை ஒற்றை சிங்கம் என்றும் இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றை சிங்கத்தை வேட்டை நாய்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்" எனப் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தைக் கடுமையாக கலாய்த்திருக்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் சுப.வீரபாண்டியன்.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, "ஆண்டாண்டுகாலமாக இந்துக்கள் வருந்துகின்றனர். இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்து மதம் சிங்கம் போன்றது. மற்ற சமூகங்களை வேட்டை நாய்கள் போன்றவை. ஒற்றை சிங்கத்தை நம் சமூகத்தினர் ஒன்றிணைந்து பாதுகாக்காவிட்டால் வேட்டை நாய்கள் சாய்த்து வீழ்த்திவிடும்" எனப் பேசியிருந்தார்.

இது தொடர்பாக இன்று சுபவீ தனது ட்விட்டரில், "இந்து சமூகம் ஒரு சிங்கமாம். பிற சமூகங்கள் வேட்டை நாய்களாம். அவை சிங்கத்தை அழித்து விடுமோ என அஞ்சுகிறார் #மோகன்பகவத். இவ்வளவு " பயந்தாங்கொள்ளி" சிங்கத்தை இதுவரை நாம் பார்த்ததில்லை. #பயந்தாங்கொள்ளிசிங்கம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

[X] Close