[X] Close
 

தமிழகத்தை போல் ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தும் புதுச்சேரி எம்எல்ஏக்கள்


pudhucherry-mlas-news

  • kamadenu
  • Posted: 12 Sep, 2018 10:44 am
  • அ+ அ-

தமிழகத்தை போல் ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தி புதுச்சேரி அனைத்துக்கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். நவம் பரில் கூடும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதுபற்றி முடிவு எடுக்கப்படவுள்ளது.

புதுச்சேரியில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்எல் ஏக்கள் பல கோரிக்கைகளை அரசிடம் வைத்தனர். ஊதிய உயர்வு, தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம், புதிய எம்எல்ஏக் களுக்கு மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் அடங்கும்.

இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள நான்காவது மாடிக் கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தரப்பிலிருந்தும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் நாராய ணசாமி, சபாநாயகர் வைத்தி லிங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, விஜயவேணி, திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா, என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயபால், அசோக் ஆனந்த், செல்வம், சந்திரபிரியங்கா, சுகுமாறன், கோபிகா, அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், அசனா, வையாபுரி மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் நவம்பரில் நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு, மனைப்பட்டா தொடர்பாக முடிவு எடுப்பதாக முதல்வர் உறுதி தந்துள்ளதாக எம்எல்ஏக்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வளவு ஊதியம்?

புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் ஊதிய உயர்வு கேட்பது ஏன் - தற்போதைய ஊதியம் எவ்வளவு என எம்எல்ஏக்கள் தரப்பில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

புதுச்சேரி எம்எல்ஏக்களுக்கு சம்பளம் ரூ.8,000 அதனுடன் பயணப் படி ரூ.20,000 (அரசு வாகனம் வழங்கியிருந்தால் கிடையாது), தொகுதிப்படி ரூ.7,000, தொலை பேசிப்படி ரூ.5,000, தபால் படி ரூ.2,500, தொகுப்புப் படி ரூ.2,500 செய்தித்தாள் படி ரூ.1,000, இழப்பீட்டுப் படி ரூ.7,000 என ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப் பட்டு வருகிறது. இந்த சம்பளத் தையும் பெரும் பாலும் எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்களே பெற்று வருகின்றனர். ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசு காரை பெற்றுக் கொண்டி ருப்பதால் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கழிக்கப்பட்டு, ரூ.28 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் தமிழகத் தைப் போல் ரூ.1,05,000 ஆக புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கும் சம்பளம் உயர்த்திப் பெற வேண்டும் என முக்கியமாக வலியுறுத்தினோம் என்று தெரிவிக்கின்றனர்.நவம்பரில் நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

[X] Close