[X] Close

ட்விட்டரில் ட்ரெண்ட்டிங் பண்ணும் நெட்டிசன்கள்: 'பிக் பாஸ் 2'வில் அறிவுரை கூறும் கமல்!


kamal-big-boss-promo

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Sep, 2018 14:25 pm
  • அ+ அ-

ட்விட்டரில் ட்ரெண்ட்டிங் பண்ணும் நெட்டிசன்களுக்கு பிக் பாஸ் 2 புரோமோவில் நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியிருக்கிறார்.

அந்தப் புரோமோவில் அவர் பேசியிருப்பதாவது:


"நினைச்சதெல்லாம் நடக்கணும்னா அதுக்காக வேலை செய்யனும்
சும்மா வாய் சொல்லில் வீரரா இருந்தா போதாது
ட்விட்டர்லையும் ட்ரால்லையும் கொமஞ்சா! போதுமா?
அதெல்லாம் நானும் செஞ்சிருக்கேன்
களத்துல இறங்கனும்
ஓட்டு போடனும் ஓட்டு வாங்கனும் வாங்க வேண்டியவங்க
அப்படி வாங்கிட்டா பதறவங்க பதறுவாங்க
அத விட்டுட்டு குத்துது கொடையதுன்னு சொல்லியிட்டிருந்தா யாரு பொறுப்பு"

இப்படி அவர் சொல்லியிருக்கிறார்.

ட்ரெண்டுல பேசுன கமல்:

கமல், ட்ரெண்டிங் பற்றி பேசியிருந்தாலும் ட்ரெண்டில்தான் பேசியிருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் திடீரென அரசியல் பதிவுகளை இட்ட களம் தான் ட்விட்டர். ஒரு கட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி நிறைய பேர் "அவர முதல்ல ட்விட்டரில் இருந்து வெளியே வந்து களத்தில் இறங்கி வேலை செய்யச் சொல்லுங்க" என்று விமர்சித்தனர்.

திடீரென்று ஒரு நாள் எண்ணூர் துறைமுகத்துக்கு சென்றார். எண்ணூர் கழிமுகத்தில் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகளால் ஆபத்து என்று பேசினார். அதுதான் அவருக்கு முதல் களமாக இருந்தது. அப்புறம் மக்கள் நீதி மய்யத்தையும் தொடங்கினார்.

நினைச்சதெல்லாம் நடக்கணும்னா அதுக்காக வேலை செய்யனும் என்று இந்த புரோமோவில் சொன்னதுபோல் செஞ்சிருக்கிறார்.

இருந்தாலும் ஒரு அரசியல்வாதின்னா ட்ரெண்டுல பேச வேண்டும். அதைத்தான் இந்த புரோமோவில் கமல் செய்திருக்கிறார். கடந்த வாரம் முழுவதும் ட்விட்டர் ஃபேஸ்புக்கில் பாசிஸ பாஜக, மீ டூ அர்பன் நக்ஸல் என ஏகப்பட்ட அரசியல் ட்ரெண்டிங். இதைத்தான் கமல்ஹாசன் மறைமுகமாக சுட்டிக்காட்டி ட்விட்டர்லையும் ட்ரால்லையும் கொமஞ்சா! போதுமா? ஓட்டு போடனும்- அப்படின்னு சொல்லியிருக்கார். ஓட்ட வாங்கி பதற வைக்கனும் என்ற பஞ்ச் வேற இருக்கு. அதனால், ட்ரெண்டுல பேசுன பிக் பாஸ் கருத்தையும் நெட்டிசன்கள் பரிசீலிக்கலாம்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close