[X] Close

இது தானா சேர்ந்த கூட்டம்: அழகிரி பேரணியும் ஆதரவாளர் மன்னனின் பெருமிதமும்


mannan-on-alagiri-rally

  • பாரதி ஆனந்த்
  • Posted: 07 Sep, 2018 10:48 am
  • அ+ அ-

இது யாராலும் அழைத்துவரப்பட்ட கூட்டம் அல்ல; தானாக சேர்ந்த கூட்டம் என அழகிரியின் அமைதிப் பேரணி குறித்து மு.க.அழகிரியின் ஆதரவாளரான முன்னாள் மதுரை மாநகராட்சி துணை மேயர் பி.எம்.மன்னன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறும்போது, "பேரணியில் 1.50 லட்சம் பேர் பங் கேற்றனர். நல்ல ஆதரவு காணப் பட்டது. பங்கேற்றவர்களும் எழுச்சியுடன் காணப்பட்டனர். நாங்கள் தனி இயக்கம் இல்ல. அழகிரி விடுத்த அழைப்பின்பேரில், அவர் மேல் உள்ள பற்று, பாசத்துக்காக வந்த கூட்டம்.

இது யாராலும் அழைத்துவரப்பட்ட கூட்டம் அல்ல. மாறாக தானாக சேர்ந்த கூட்டம், மாநிலத்தின் அனைத்து பகுதி களில் இருந்தும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர்.

கூட்டம் சேர்ப்பது இன்று சாதாரண காரியமல்ல. முக்கிய கட்சிகளின் மாநாட்டுக்கே கூட்டம் சேர்க்க முடியாத நிலைமையே இன்று உள்ளது.

பெரிய வெற்றியை பெற்ற அமைதிப் பேரணியில் அழகிரியின் செல்வாக்கை பார்த்த பிறகாவது திமுக தலைமை தனது நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close