[X] Close

ஸ்டாலினை முதல்வராக்க தொடர்ந்து பாடுபடுவேன்: மீண்டும் திமுக-வில் இணைந்த முல்லைவேந்தன் பேட்டி


mullaiventhan-interview-about-dmk

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 04 Sep, 2018 14:36 pm
  • அ+ அ-

திமுக-வில் மீண்டும் இணைந்த முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் நேற்று தருமபுரியில் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து கட்சியினரைச் சந்தித்தார்.

தருமபுரி மாவட்ட திமுக-வில் முன்னாள் மாவட்ட செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் முல்லைவேந்தன். இவர், கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடுகளால் அரசியல் செயல்பாடுகளில் நாட்டமின்றி காணப்பட்டார். பின்னர் தலைமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், கடந்த 2015-ம் ஆண்டு தேமுதிக-வில் இணைந்தார். இருந்தபோதும், அந்த கட்சியிலும் தீவிர அரசியல் செயல்பாடுகளின்றி காணப்பட்டார். இந்நிலையில், திமுக-வில் மீண்டும் இணைய முல்லைவேந்தன் முயற்சி மேற்கொண்டார். இதையறிந்த, கட்சியின் புதிய தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் மீண்டும் திமுக-வில் இணைந்தார். கட்சியில் இணைந்த பின்னர் நேற்று தருமபுரி நகருக்கு வந்த முல்லைவேந்தன், 4 ரோடு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கிருஷ்ணகிரி சாலையில் அமைந்துள்ள திமுக அலுவலகத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்கவும், தமிழகத்தையும், தருமபுரியையும் வலிமையான திமுக கோட்டையாக மாற்றவும் கட்சியினருடன் இணைந்து தொடர்ந்து பாடுபடுவேன்’ என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்டச் செயலாளரும், தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினர் இன்பசேகரன், மாவட்ட அவைத் தலைவர் மாதையன், பொருளாளர் தர்மசெல்வன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close