[X] Close

ஸ்டாலின் எண்ணம் நிறைவேறாது: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேச்சு 


minister-velumani-speech-about-stalin

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 04 Sep, 2018 14:30 pm
  • அ+ அ-

வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை வட்டார அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆனைமலையில் நடைபெற்றது.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தற்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஆனவுடனேயே தான் முதல்வர் ஆகிவிட்டதாக கருதுகிறார். ஸ்டாலின் எப்படியாவது அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு முதல்வராக வேண்டும் என்று எண்ணுகிறார் அது ஒருபோதும் நடக்காது . முதல்வர் ஆகும் எண்ணம் மட்டுமே உள்ளதே தவிர மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை.

ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து செயல்படுத்திய திட்டங்களைவிட தற்போது 3 மடங்கு திட்டங்கள் அதிகமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 9810 கோடி கடன் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 20 ஆயிரத்து 460 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு திமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரிவாசு, பொள்ளாச்சி எம்பி மகேந்திரன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close