[X] Close

ஆற்காடு வீராசாமி எதையும் வாங்கலாம்; அதிமுக எம்.எல்.ஏ.,க்களைத் தவிர!- ஜெயக்குமார் பதிலடி


jayakumar-slams-arcot-veerasamy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Sep, 2018 15:24 pm
  • அ+ அ-

ஆற்காடு வீராசாமி நினைத்தால் எதையும் வாங்கலாம்; அதிமுக எம்.எல்.ஏ.,க்களைத் தவிர என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஆற்காடு வீராசாமி, "அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரை கட்சியிலிருந்து எங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்றால் தலா ரூ.10 கோடி வீதம் ரூ.100 கோடி தேவை. ஆனால், அந்தப் பணம் எங்கிருக்கிறது. என்னிடம் ரூ.100 கோடி இருந்தால் நான் இதை செய்து காட்டுவேன்" எனக் கூறியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், "உலகளவில் பணக்காரர்கள் வரிசையில் திமுக குடும்பம் இருக்கிறது. அந்த திமுக குடும்பத்தின் அங்கமாகவே ஆற்காடு வீராசாமி இருக்கிறார். அவர்களிடம் ரூ.100 கோடி மட்டும் இல்லை. அதற்கும் அதிகமாக உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வர் குடும்பம். ஆற்காடு வீராசாமி நினைத்தால் எதையும் வாங்கலாம்; அதிமுக எம்.எல்.ஏ.,க்களைத் தவிர" எனத் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close