[X] Close

ஹாட்லீக்ஸ் : மணல் மாஃபியா தந்த இன்னோவா!


hot-leaks-manal

  • kamadenu
  • Posted: 24 Aug, 2018 10:02 am
  • அ+ அ-

வட நாட்டுக் கொள்ளையர்களைப் பிடிக்கப் போய் சிக்கலில் மாட்டிக்கொண்டு காத்திருப்பில் வைக்கப்பட்டவர் அந்தக் காவல் அதிகாரி. சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். 

அங்கு போனதிலிருந்தே மணல் மாஃபியாக்களைப் பிடிக்கும் விஷயத்தில் அதிக முனைப்பு காட்டிய அதிகாரி, எந்நேரமும் துப்பாக்கியும் கையுமாய் அலைந்தாராம்.

இதனால் கலவரப்பட்டுப் போன மணல் மாஃபியாக்கள், இது விஷயமாக மாவட்டத்தின் ஆளும் அதிகாரப் புள்ளியிடம் போய் கண்ணைக் கசக்கினார்களாம். 

உடனே அதிகாரப் புள்ளி, காவல் அதிகாரியை அழைத்து ‘பக்குவமாய்’ அட்வைஸ் செய்தாராம். அப்படியும் மசியாத காவல் அதிகாரி, அதன்பிறகு, தான் நேரடியாகக் களத்தில் இறங்காமல் வருவாய்த் துறையினரை உசுப்பிவிட்டு மணல் மாஃபியாக்களுக்கு செக் வைத்தாராம். இதனால், இனி தூதுவிட்டுப் புண்ணியமில்லை என முடிவுக்கு வந்த மாஃபியாக்கள், நேரடியாகவே காவல் அதிகாரியிடம் பேச்சுக்கு வந்தார்களாம்.

அப்போது என்ன ஒப்பந்தம் கையெழுத்தானதோ தெரியவில்லை. இப்போது, புத்தம் புதிய இன்னோவா காரில் ஹாயாக வலம் வருகிறார் காவல்!

கேட்டால், “27 லட்ச ரூபாய் மதிப்புடைய இந்த இன்னோவா கார் மணல் புள்ளிகள் கூட்டாகச் சேர்ந்தளித்த அன்பளிப்பாக்கும்” என்கிறார்கள் மணல் தளத்தில் இயங்கும் மக்கள்!

 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close