[X] Close
 

கலைஞர் அன்று அழுத அழுகை!


kalaingar-mgr

கலைஞர் - எம்ஜிஆர்

  • வி.ராம்ஜி
  • Posted: 19 Aug, 2018 20:20 pm
  • அ+ அ-

எதற்காக கலைஞர் அழுதார் என்று துரைமுருகனிடம் கேட்டபோது, கலைஞர் அன்று அழுத அழுகையை மறக்கவே முடியாது என்று தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி  ஒன்றில், கலைஞரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட திமுகவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரான துரைமுருகனிடம் கலைஞர் எதற்காகவாவது அழுது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.

இந்தக் கேள்வியைக் கேட்டதும் சட்டென்று பதில் சொன்னார்… எம்.ஜி.ஆர். இறந்த அன்று… என்று!

எம்.ஜி.ஆர். இறந்துவிட்ட தகவல் சொல்லப்பட்டது. உடனே அந்த அதிகாலைக்கு முன்பாகவே கலைஞர் சென்று, எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார். பிறகு வீட்டுக்கு வந்தவர் யாரிடமும் பேசவில்லை. அழுதுகொண்டே இருந்தார். உணவு கூட எடுத்துக்கொள்ளவில்லை. அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது.

மதியம் வரை அப்படியே இருந்தார். பிறகு சிறிதுநேரம் அமைதியாக இருந்தவர், தொலைக்காட்சியில்  இறுதி ஊர்வலத்தைப் பார்த்தார். அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தவர், இந்த முறை கதறியழ ஆரம்பித்துவிட்டார். அவரைத் தேற்றவே முடியவில்லை. ஆறுதல் சொல்லவே முடியவில்லை.

எம்ஜிஆர் மேல் அப்படியொரு அன்பு வைத்திருந்தார் கலைஞர். அதற்கு முன்பும் சரி, பிறகும் சரி… அப்படி அழுது கலைஞரைப் பார்த்ததே இல்லை. எம்ஜிஆர் என்றில்லை… கலைஞர் எப்போதுமே நட்பை ரொம்பவே மதிப்பவர். நட்புக்கும் நண்பர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்.

இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

கலைஞர் பற்றிய இந்தச் செய்தியைப் படிக்க... 

ராஜாமணி...என்னை மன்னிச்சிருய்யா!  - தொண்டனிடம் கலைஞர் உருக்கம்

[X] Close