[X] Close

ரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை! - அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்


rajini-sellur-raju

அமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர் ரஜினிகாந்த்

  • வி.ராம்ஜி
  • Posted: 16 Aug, 2018 12:49 pm
  • அ+ அ-

அதிமுகவைப் பற்றிப் பேசுவதற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு இன்னும் போதுமான அரசியல் அறிவு இல்லை. எனவே அவர் அரசியல் பாடம் கற்றுக்கொண்டு பேசட்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

ரஜினி எப்போதுமே சிந்தித்துப் பேசக்கூடியவர். ஆழமான கருத்துக்களைச் சொல்லக்கூடியவர். ஆனால் அதிமுக அரசைப் பற்றிப் பேசுவதற்கு உண்டான அரசியல் அறிவு, இன்னும் போதுமான அளவுக்கு அவருக்கு இல்லை. அரசியல் முதிர்ச்சி கொண்ட அண்ணன் ஆர்.எம்.வீரப்பனிடம் ரஜினி அரசியல் பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அரசியலைப் பொருத்தவரை, எம்ஜிஆரும் கலைஞரும் சூரியனும் சந்திரரும் போன்றவர்கள். சூரியன் வேறு; சந்திரன் வேறு. அதிமுகவினர், கலைஞர் கருணாநிதியை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதையெல்லாம் தெரிந்துகொண்டு ரஜினி பேசினால் நல்லது.

இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close