[X] Close

இந்திய முதல்வர்களுக்கே முதல்வன்!


independence-day-kalaingar

கலைஞர் கருணாநிதி

  • வி.ராம்ஜி
  • Posted: 14 Aug, 2018 11:12 am
  • அ+ அ-

நாளைய தினம் சுதந்திரத் திருநாள். ஆகஸ்ட் 15. இந்தநாளில், இந்தியாவெங்கும் வெற்றி அடைந்த நன்னாளைக் கோலாகலமாக. கொண்டாடிக் கொண்டிருக்கும். இந்தநாளில், எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநிலத்தில் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றி, விழா கொண்டாடுவார்கள்.

ஆனால் அன்று அப்படியில்லை.

மாநிலத்தின் தலைமை அலுவலகத்தில், கோட்டையில், அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். இந்தியாவில், சுதந்திரதினத்தில் பிரதமர் கொடியேற்றுவார். குடியரசு தின நன்னாளில் ஜனாதிபதி கொடியேற்றுவது வழக்கம். இதுவே தொன்றுதொட்டு நடந்து வந்தது.

சுதந்திர தினத்தில் பிரதமர் கொடியேற்றுகிறார். குடியரசு தினத்தில் ஜனாதிபதி கொடியேற்றுகிறார். இவர்கள் கொடியேற்றுகிற உரிமை உள்ளவர்களாக இருக்கும்போது, மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர்களுக்கு கொடி ஏற்றும் உரிமை வழங்க வேண்டும் என முதன்முதலாக ஆட்சிக்கு வந்த காலகட்டத்திலேயே குரல் எழுப்பினார்.

இதையடுத்து 1974ம் ஆண்டு, சுதந்திரதினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று, தமிழகத்தில் முதல்வர் கொடியேற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதுமட்டும் அல்ல. தமிழகம் மட்டுமின்றி, கலைஞர் விடுத்த கோரிக்கையை அடுத்து, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதல்வரே கொடியேற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதாவது, 1974ம் ஆண்டில் இருந்து சுதந்திர தின விழாவில்., முதல்வர் கொடியேற்றும் நிகழ்வு, இன்றைக்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சுதந்திர தினத்தின் போது, முதல்வர் கொடியேற்றும் அதிகாரத்தை, இந்தியாவின் முதல்வர்கள் அனைவருக்குமே பெற்றுத் தந்தது கலைஞர் கருணாநிதிதான்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close