[X] Close

திருநங்கைகளுக்கு அங்கீகாரம்: கலைஞருக்கு 12ம் தேதி அஞ்சலி


thirunangai

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 10 Aug, 2018 11:07 am
  • அ+ அ-

திருநங்கை, திருநம்பி, மூன்றாம் பாலினம் என பெயரிட்டு அவர்களுக்கு நல வாரியம் அமைத்து அரசு அங்கீகாரம் வழங்கியது கலைஞர்.

இன்று தமிழகத்தை பின்பற்றி பல மாநிலங்களிலும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கி உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
‘எ பெண்டாஸ்டிக் வுமன்’ என்ற திரைப்படம் திருநங்கையின் உரிமைப்போராட்டத்தை விவரிக்கும் களத்தை மையமாக கொண்டது. கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  ‘எ பெண்டாஸ்டிக் வுமன்’ திரையிடலை சென்னை சுயாதீன திரைப்பட இயக்கம் கட்டமைத்துள்ளது.

2017 ஆஸ்கர் விருது பெற்ற இத்திரைப்படத்தை இயக்கியவர் செபாஸ்டியன் லேல்யோ.  எழுத்தாளர், திரைக்கதையாளர் எம்.கே.மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்து ‘எ பெண்டாஸ்டிக் வுமன்’ திரைப்படத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்க வருகிறார்.

இதற்கான அனுமதி இலவசம் என்று தெரிவித்துள்ளார்கள்.

 12-08-2018 [ஞாயிறு] அன்றூ மாலை 6 மணிக்கு, இ ஆர்ட் ஸ்டூடியோஸ் நடிப்பு பயிலரங்கத்தில் திரையிடப்படுகிறது. சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் மூன்றாவது சாலையில், சூர்யமங்கலம் ஆஸ்ரமம் எதிரில் உள்ளது இந்த ஸ்டூடியோஸ்.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close