[X] Close
 

ஹாட்லீக்ஸ் : பாயும் பாஸ்வான்!


hot-leaks-baswan

ராம் விலாஸ் பாஸ்வான்

  • kamadenu
  • Posted: 10 Aug, 2018 10:36 am
  • அ+ அ-

எஸ்சி - எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி பலதரப்பிலும் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் தேர்தல் நெருங்குவதால் இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கின்றன. “இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்” எனக் கொடி தூக்கியிருக்கும் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான், “இந்த சட்டத் திருத்தத்தை மேற்கொண்ட நீதிபதி தனது பணி ஓய்வுக்குப் பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் எடுக்க வேண்டும்” எனக் கெடு விதித்திருந்தார். இது, கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவதற்கான தந்திரமா அல்லது தேர்தல் ஸ்டண்டா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்!

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close