[X] Close

அண்ணா தந்த மோதிரத்துடன் அடக்கம்!


anna-ring

கலைஞர் கருணாநிதி

  • kamadenu
  • Posted: 09 Aug, 2018 09:35 am
  • அ+ அ-

1967ல் திமுக தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் நிதியாக 11 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி. 

இதைப் பாராட்டி, கருணாநிதிக்கு மோதிரம் ஒன்றை பரிசாக அணிவித்தார் அண்ணா. 

தன் வாழ்நாள் முழுவதும் அண்ணா வழங்கிய மோதிரத்தை அணிந்துகொண்டே இருந்தார். 

ஒருமுறை, சேலத்துக்குச் சென்ற போது மோதிரம் காணாமல் போனதாகவோ அங்கே தங்கிய இடத்தில் விட்டதாகவோ சொல்வார்கள். அப்போது கட்சி நிர்வாகி ஒருவர், கலைஞரைத் தேடி வந்து அந்த மோதிரத்தை வழங்கினார். நெகிழ்ந்து போனார் கலைஞர். 

இப்போது அண்ணாவிடன் நினைவிடம் அருகே, அண்ணாவின் சமாதிக்கு அருகில் கலைஞரின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கலைஞரின் கைவிரலில் அண்ணா அணிவித்த அந்த மோதிரமும் அப்படியே வைத்து, கழற்றாமலேயே அடக்கம் செய்யப்பட்டது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close