[X] Close

திமுக இருக்கும் கூட்டணியில் எங்களுக்கு வேலை இல்லை: டிடிவி


would-not-join-any-alliance-where-dmk-is-there

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Aug, 2018 12:58 pm
  • அ+ அ-

திமுக இடம்பெறும் கூட்டணியில் தங்களது அமமுக இடம்பெறாது என அக்கட்சியின் நிறுவனர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் 2019 மக்களவை தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது திமுக இருக்கும் கூட்டணியில் தங்கள் கட்சி நிச்சயம் இடம்பெறாது என்றார்.
சுமார் 45 நிமிடங்கள் சசிகலாவுடனான சந்திப்பு நீண்டது. டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவாலர் புகழேந்தியும் சென்றிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, "2019 மக்களவை தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. 2014 மக்களவைத் தேர்தல் காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்தது. ஆனால், அம்மா தனியாக நின்றார். நான்னும் அம்மாவைப் போல்தான். ஆனால் அதற்காக கூட்டணிக்கே முற்றிலும் நான் எதிரானவன் அல்ல. அதேவேளையில் திமுக இடம்பெற்றிருக்கும் கூட்டணியில் எங்கள் கட்சி நிச்சயம் இணையாது. ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் ஆதரவு தேவைப்பட்டால் அவர்கள் திமுக கூட்டணியை உதறிவிட்டு வரட்டும்" என்றார்.

2019 தேர்தலில் பாஜகவை வெளியேற்ற மம்தா பானர்ஜி வகுத்துவரும் அரசியல் வியூகத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களை இணைத்து வருகின்றன. இந்தச் சூழலில் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு டிடிவி இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close