[X] Close

அரசியலில் ராகுல் பட்டம் பெற்றுவிட்டார்: சிவசேனா பாராட்டு


shiv-sena-cheers-rahul-gandhi-on-lok-sabha-speech

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Jul, 2018 10:58 am
  • அ+ அ-

மக்களவையில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரைதான் அனைத்து ஊடகங்களிலும் வாதவிவாதப் பொருளாக இருக்கிறது. 

இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு சிவசேனா கட்சி பாராட்டு தெரிவித்திருக்கிறது.

மத்தியில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான சிவசேனா ராகுல் காந்தியைப் பாராட்டியிருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அரசியலில் ராகுல் காந்தி பட்டம் பெற்றுவிட்டதாக சிவசேனா பாராட்டு தெரிவித்திருக்கிறது.

இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சிவசேனா மூத்த தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத், "ராகுல் காந்தி அரசியல் பாடத்தில் பட்டம் பெற்றுவிட்டார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டியணைத்தது மோடிக்கு அதிர்ச்சியையே அளித்தது. இது ஒரு நாடகம் என சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், அரசியலில் சிறிதளவு நாடகம் இருக்கத்தான் செய்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசை ஆதரிப்பதில்லை என்று முடிவு செய்தோம். இப்படி ஒரு முடிவு எடுக்க மிகப்பெரிய துணிச்சலும் தைரியமும் வேண்டும். அது எங்கள் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு இருக்கிறது" எனக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close