[X] Close
 

பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஷாருக்கானின் உறவினர்


shah-rukh-khans-cousin-to-contest-election-in-pakistan

  • பாரதி
  • Posted: 09 Jun, 2018 12:27 pm
  • அ+ அ-

பாலிவுட் பாட்ஷா என்றழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானின் உறவுக்காரப் பெண் ஒருவர் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுகிறார்.

பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஷாருக்கானின் உறவுக்காரப் பெண் நூர்ஜஹான் போட்டியிடுகிறார். கைபர் பக்துவா மாகாணத்தில் நூர்ஜஹான்  சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார். எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து நூர்ஜஹான், "மகளிர் மேம்பாட்டுக்காக பணியாற்றுவதே எனது லட்சியம். எனது தொகுதியில் உள்ள குறைகளைத் தீர்ப்பேன்" என்றார்.

ஷாருக்கானின் தந்தைவழி உறவுக்காரப் பெண்ணான நூர்ஜஹான் ஷாருக்கானை இரண்டு முறை சந்தித்திருக்கிறார். அவரது குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவில் உள்ள தங்களது சொந்தங்களுடன் நல்ல உறவில் இருக்கின்றனர். நூர்ஜஹான் இதற்கு முன்னர் கவுன்சிலராகப் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
நூர்ஜஹானுக்கான தேர்தல் பிரச்சாரத்தை அவரது சகோதரர் மன்சூர் கவனித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close