[X] Close
 

எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்?-  வெகுண்டெழுந்த பிரகாஷ் ராஜ்


how-long-will-you-fool-us-citizens

  • பாரதி
  • Posted: 08 Jun, 2018 14:12 pm
  • அ+ அ-

இதுநாள் வரை பாஜகவை விமர்சித்துவந்த பிரகாஷ் ராஜ் இன்று காங்கிரஸையும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் விளாசியிருக்கிறார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் அண்மைக்காலமாக தீவிர அரசியல் விமர்சகராக தனது வாதங்களை முன்வைத்து வருகிறார். கர்நாடக அரசியல் மட்டுமல்ல ரஜினியின் ஆன்மிக அரசியலும்கூட இவரது விமர்சனங்களுக்குள் சிக்காமல் சென்றதில்லை. பிரதமர் மோடியை தன்னைவிட சிறந்த நடிகர் என்று துணிச்சலாக விமர்சித்தவர்தான் பிரகாஷ் ராஜ்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் இருந்தே பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார். அதுவும் அவரது குடும்ப நண்பரும் முற்போக்கு பத்திரிகையாளருமான கவுரி லங்கேஷின் படுகொலை சம்பவம் பிரகாஷ் ராஜின் கோப முகத்தை முத்திரை பதித்தது. #justasking என்ற ஹேஷ்டேகுகளின் கீழ் அவர் பாஜகவை விமர்சித்ததே அதிகம். 

இப்போது முதன்முறையாக கர்நாடகாவில் ஆளும் மதச்சார்பற்ற ஜனத தளம் - காங்கிரஸ் கூட்டணிக்கு காரசார கேள்வியை முன்வைத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

அவர் தனது ட்விட்டரில், "கர்நாடக அரசியல்!! பாஜக பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தது. இப்போது நீங்கள் காங்/மஜத கூட்டணியினர் அமைச்சரவை பதவிக்களை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் உங்களை விற்பனை செய்ய துணிந்துவிட்டீர்கள். மக்களாகிய எங்களை எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?? எப்போதுதான் ஆட்சி செலுத்தப்போகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமைச்சரவை பதவிகளுக்கு நடக்கும் போட்டா போட்டியில் காங்., - மஜத கூட்டணியே தாக்குப்பிடிக்காது என்று அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் சூழலில் பிரகாஷ் ராஜின் இந்த ட்வீட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close