[X] Close

தமிழகம் கண்ணுக்குத் தெரியவில்லை கர்நாடகாவுக்கு ட்வீட்டா: மோடியை வறுத்தெடுத்த தமிழ் நெட்டிசன்கள்


modi-tweets-for-karnataka-irks-tamil-netizens

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 May, 2018 10:13 am
  • அ+ அ-

கர்நாடகாவில் பருவமழை காரணமாக மழை வெள்ளம் தேங்கியிருக்கும் சூழலில் கர்நாடக மக்களை நலம் விசாரித்து பிரதமர் மோடி ட்வீட் செய்திருப்பது தமிழ் நெட்டிசன்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பிரதமர் மோடி நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நான் அதிகாரிகளுடன் பேசியிருக்கிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்தக் கருத்தின் கீழ் தமிழ் நெட்டிசன்கள் பலரும் வெகுண்டெழுந்து ஆவசப் பதிவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

அப்படிப் பகிரப்பட்ட ட்வீட்கள் சில..


அமலா @Amala_Jesuraj 
மோடிக்கு செலக்டிவ் அம்னீசியா இருக்கிறது.

ராஜ்குமார் @Rajvenka
உங்களது பிரார்த்தனைகளுக்கு நன்றி. நீங்கள் தமிழ்நாட்டுக்கும் சேர்த்துதான் பிரதமர் என நினைக்கிறேன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். #SterliteKillings  

சுபாஷ் சந்திர போஸ் @scbose11
மோடி அவர்களே தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு பகுதிதான். மீண்டும் கோ பேக் மோடி சொல்ல வேண்டுன் என நினைக்கிறேன்.
 
டிகே.பிரதீப் குமார் @Pradeep_tk
அப்படியே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள் மோடி.

கவுசிக் @LMKMovieManiac

பிரதமர் அவர்களே, கடந்த வாரம் தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் தூத்துக்குடி சம்பவத்துக்கும் நீங்கள் இரங்கல் தெரிவித்திருக்கலாமே. என்ன ஒரு நயவஞ்சகம். இந்தியாவின் தென் கோடி மாநிலமாக இருந்தாலும் நாங்களும் இந்தியர்கள்தான்.

இவ்வாறாக தமிழகம் கண்ணுக்குத் தெரியாதா என தமிழ் நெட்டிசன்கள் பிரதமர் மோடியை வறுத்தெடுத்துள்ளனர்.

தோசை சர்ச்சை முடிவதற்குள்..
அண்மையில், பிரதமர் மோடி உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்தவர்களுடன் கலந்துரையாடியபோது கிருஷ்ணகிரி பெண்ணிடம் தமிழகத்துக்கு வந்தால் தோசை சுட்டுத் தருவீர்களா? எனக் கேட்டதற்கும் தமிழ் நெட்டிசன்கள் மோடியை விளாசினர். தற்போது கர்நாடக மக்களை நலம் விசாரித்துவிட்டு தூத்துக்குடி சம்பவத்தில் மவுனம் காத்து வருவதற்கு கண்டனக் குரல்களை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் மோடி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close