[X] Close
 

கர்நாடகா தேர்தலுக்காக 30 லட்சம் ட்வீட்கள்: புள்ளிவிவரங்களை வெளியிட்டது ட்விட்டர்


twitter-saw-over-30-lakh-tweets-related-to-karnataka-polls

  • kamadenu
  • Posted: 16 May, 2018 10:51 am
  • அ+ அ-

கர்நாடகா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் தொடங்கி ட்விட்டரில் கர்நாடகா தேர்தல் தொடர்பாக 30 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டதாக ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 15) வெளியாகின. இதில் பாஜக 108 இடங்களில் காங்கிரஸ் 78 இடங்களில் மஜத 38 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதனையடுத்து, கர்நாடகாவில் புதிய ஆட்சியமைக்க உரிமை கோரி பாஜக தரப் பில் எடியூரப்பாவும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) கூட்டணி சார்பில் குமாரசாமியும் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியதில் இருந்தே ட்விட்டரில் கர்நாடக தேர்தல் தொடர்பாக நிறைய ட்வீட்கள் குவிந்தன. கடந்த 3 வாரங்களில் மட்டும் கர்நாடகா தேர்தல் தொடர்பாக பாஜக சார்பில் 51% ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் 42% ட்வீட்களும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் 7% ட்வீட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ட்விட்டரில் அதிகம் மென்ஷன் செய்யப்பட்ட வேட்பாளர் சித்தராமையாவும் அதிகம் மென்ஷன் செய்யப்பட்ட பெர்சானாலிட்டியாக மோடியும் உள்ளனர்.

இதன் மூலம், ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட இந்திய மாநிலத்தின் தேர்தல் கர்நாடக மாநிலத் தேர்தலாக இருக்கிறது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், #KarnatakaVerdict என்ற ஹேஷ்டேக் தேர்தல் தொடர்பாக அதிகம் பேசப்பட்ட தலைப்பாக உள்ளது. #KarnatakaElections2018 என்ற ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக இருக்கிறது என்ற புள்ளிவிவரங்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close