[X] Close
 

லிங்காயத்துகள் பிரச்சினையை கிளப்பியிருக்கவே கூடாது.. கர்நாடக தேர்தல் தோல்வியும் வீரப்ப மொய்லியின் பார்வையும்


lingayat-minority-status-issue-backfired-on-us

  • kamadenu
  • Posted: 15 May, 2018 15:00 pm
  • அ+ அ-

கர்நாடகத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் சாதி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி நகர்த்திய தவறான காய்களே இத்தோல்விக்குக் காரணம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து வீரப்ப மொய்லி, "கர்நாடகத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் சாதி அடிப்படையில் கட்சி நகர்த்திய தவறான காய்களே இத்தோல்விக்குக் காரணம். லிங்காயத்து பிரச்சினையை காங்கிரஸ் இப்போது கையில் எடுத்திருக்கவே கூடாது. தேர்தல் வியூகம் வகுக்கும்போது காங்கிரஸ் சாதி ரீதியான கணக்குகளைத் தவறவிட்டுவிட்டது.

வளர்ச்சியின் அடிப்படையிலோ அல்லது சமூக நீதி அடிப்படையிலோ தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தால் நிச்சயம் காங்கிரஸ்தான் வெற்றி பெற்றிருக்கும். ஆனாக், எங்கேயோ ஏதோ தவறு நடந்திருக்கிறது. சாதிகளை கையாள்வதில் காங்கிரஸ் கோட்டைவிட்டுவிட்டது.

லிங்காயத்துக்களுக்கு தனியாக சிறுபான்மை அந்தஸ்து அளிக்கும் முடிவு முன்வைக்கப்பட்டபோதே கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது. அதுதான் காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் ஒக்கலிகாக்களை கையாள்வதிலும் காங்கிரஸ் தவறிவிட்டது.

பாஜக முன்வைத்த எதிர்மறை பிரச்சாரம்:
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வர லிங்காயத்துகள் ஆதரவு அவசியம். அதே சமயம் இந்து மதத்திலிருந்து அவர்கள் பிரிந்து செல்வதையும் அதனால் ஏற்க முடியவில்லை. எனவே, 'இந்துக்களைப் பிளவு படுத்துகிறது காங்கிரஸ்' என்று சாடியது. இந்த எதிர்மறை பிரச்சாரம் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அனைத்திந்திய வீர சைவ மகாசபை என்ன முடிவெடுக்கிறதோ அதன்படி செயல்படத் தயார் என்று அறிவித்திருக்கிறார் எடியூரப்பா. லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் 2013-ல் அளித்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டவர்களில் எடியூரப்பாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த லிங்காயத்துக்கள்:
பசவண்ணர், 12-வது நூற்றாண்டில் லிங்காயத்து தர்மத்தை உபதேசித்தார். களவு, கொலை, பொய்கள், அவதூறு போன்றவற்றைக் கைவிட அகத் தூய்மை வேண்டும் என்ற பசவண்ணர், மற்றவர்களுக்கு எதிரான வெறுப்பைக் கைவிடுங்கள் என்றார். லிங்காயத்துகள் தங்களுடைய சமயத்தை பிராமணிய, ஜைன, பூர்வீக வழிபாட்டு முறைகளிலிருந்து வேறுபட்டதாக உருவாக்கினர். எல்லாவகை உடலுழைப்புச் சாதியினரையும் சேர்த்துக்கொண்டனர். வசனங்களை சம்ஸ்கிருதத்தில் எழுதாமல், பாமரரும் படிக்குமாறு கன்னடத்தில் எழுதினர். உடலுழைப்பை மகத்தான ஆன்மிக லட்சியமாக உயர்த்தி, வெவ்வேறு தொழில்களைச் செய்தாலும் அனைவரும் சமமே என்பதை வலியுறுத்தினர். ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதை நிராகரித்தனர், பிராணிகளைப் பலி கொடுப்பதைக் கைவிட்டனர்.

மைசூர் மாகாணத்தில் 1881-ல் முதல் முறையாக இந்து மதத்தின் ஒரு சாதிப் பிரிவாக லிங்காயத்துகள் பதிவுசெய்யப்பட்டனர். தங்களைத் தனி மதத்தவராகக் கருத வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை, இந்திய அரசியல் சட்டம் உருவானபோது நிராகரிக்கப்பட்டது. இருபதாவது நூற்றாண்டின் முற்பகுதியில் குடை அமைப்பாகத் தொடங்கப்பட்ட ‘அனைத்து இந்திய வீரசைவ மகாசபை’, தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மன்மோகன் சிங் தலைமையிலான அரசிடம் 2013-ல் முன்வைத்தது. ‘லிங்காயத்துகள் தனி மதத்தவர் அல்ல, இந்துக்கள் தான்’ என்று கூறி அந்தக் கோரிக்கையை உள்துறை அமைச்சகம் அப்போது நிராகரித்துவிட்டது.

தேர்தல் முடிவை நிர்ணயிப்பவர்கள்..

6.5 கோடி மக்கள்தொகை கொண்ட கர்நாடகத்தில் லிங்காயத்துகளின் எண்ணிக்கை மட்டும் 13%. அவர்கள் அரசியல் - சமூக விழிப்புணர்வு உள்ளவர்கள். கர்நாடக சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் 47 பேர் லிங்காயத்துகள். சுமார் 100 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் முடிவு களையே மாற்றும் அளவுக்கு எண்ணிக்கை பலம் உள்ளவர்கள். 2011-ல் பசவ ஜெயந்திக்கு மாநில விடுமுறை அறிவித்தது பாஜக அரசு. எல்லா அரசு அலுவலகங்களிலும் பசவரின் உருவப்படங்களைக் கட்டாயம் மாட்ட வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டது காங்கிரஸ் அரசு.
1970-கள் வரை காங்கிரஸ் கட்சியைத்தான் லிங்கா யத்துகள் ஆதரித்தனர். தேவராஜ் அர்ஸ் முதலமைச் சராக இருந்தபோது, இதர பெரும் சாதியினரை ஈர்க்கும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டியதால் லிங்காயத்துகள் காங்கிரஸை விட்டு விலகி, ஜனதா கட்சியை ஆதரித்தனர். ஜனதா பிறகு ஜனதா தளம் என்றாகி, அதன் பிறகு எச்.டி.தேவகௌடா தலைமை யில் மதச்சார்பற்ற ஜனதா தளம் உருவாகியது. அவர் ஒக்கலிகர் சாதியைச் சேர்ந்தவர் என்பதால், 1990- களின் பிற்பகுதியில் லிங்காயத்தான பி.எஸ்.எடியூரப்பாவுக்காக பாஜகவை ஆதரித்தனர். ஊழல் புகார் களையடுத்து, கட்சி மேலிடம் எடுத்த நடவடிக்கைகளால் கோபமடைந்த எடியூரப்பா ‘கர்நாடக ஜனதா பட்ச’ என்ற கட்சியை 2012-ல் தொடங்கினார். இதனால் லிங்காயத்துகளின் ஆதரவை இழந்த பாஜக 2013-ல் ஆட்சியையும் காங்கிரஸிடம் இழந்தது.

தொடர்புடைய செய்திகள்

 
 
Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close