[X] Close

கர்நாடகத் தேர்தலில் ஜெயிக்கப்போவது யார்?- கடும் போட்டியில் காங்., - பாஜக; ஆட்சியை நிர்ணயிப்பாரா தேவே கவுடா?


karanataka-poll-results

  • பாரதி ஆனந்த்
  • Posted: 15 May, 2018 09:27 am
  • அ+ அ-

கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 72% வாக்குகள் பதிவான நிலையில், பெரும்பாலான கருத்துகணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவும், சில கருத்து கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாகவும் இன்னும் சில கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் தொங்கு சட்டசபையே அமையும் எனத் தெரிவித்தன.

ஆனால், எல்லா கருத்து கணிப்புகளும் ஒரு விஷயத்தைப் பொதுவில் வைத்தன.

அது, கர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பது என்பதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதே அது. ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கவுடாவோ தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை பொறுமையாக இருப்போம் என அரசியல் காயை நேர்த்தியாக நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் தான் இன்று (மே 15) காலை கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேச்சுவார்த்தையில் எச்.டி.குமாரசாமி..
இதற்கிடையில், மதச் சார்பற்ற ஜனதா தளத்தில் எச்.டி.குமாரசாமி காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகளுடனும் ரகசியப் பேச்சுவார்த்தையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் நிச்சயம் ஆட்சியை அமைப்பத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.

காங்கிரஸ் பெரும்பான்மை பலத்தைப் பெறாவிட்டால், தங்களை அனுக வேண்டியது அக்கட்சியின் கடமை என ஏற்கெனவே மதச்சார்பற்ற ஜனதாதளம் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

சித்தராமையாவுக்கு பின்னடைவு:

கர்நாடகா தேர்தலில் சாமுண்டீஸ்வரி, பதாமி என இரு தொகுதிகளில் முதல்வர் சித்தராமையா போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலுமே அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றால், இதுவே எனது கடைசித் தேர்தலாக இருக்கும் என சித்தராமையா கூறியிருந்தார். மேலும், ஒரு தலித் முதல்வராவதற்கு தான் தனது பதவியை தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

காங்கிரஸ் மேலிடம் ஏற்கெனவே சித்தராமையா மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் சூழலில் சித்தராமையாவின் இந்தப் பேச்சு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதேவேளையில், பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தான் போட்டியிட்ட சிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

முந்தும் பாஜக..
காலை 9.15 மணி நிலவரப்படி ஆளும் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும் பாஜக 87 இடங்களிலும் மதச் சார்பற்ற ஜனதா தளம் 39 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தலில் வாக்களித்த நாளன்றே பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தான் முதல்வராவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மே 17- பதவியேற்பேன் என்றுகூட கூறினார். அவரது நம்பிக்கை ஜெயிக்குமா? கருத்து கணிப்புகள் பலிக்குமா? இல்லை மதச் சார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியும் நிர்ணயிக்குமா என்பதெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close