[X] Close

தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தேர்தல் வெற்றிக்காக யாகம்


bjp-success

  • kamadenu
  • Posted: 22 Mar, 2019 07:04 am
  • அ+ அ-

மக் களவைத் தேர்தலில் பாஜகவும் அதைச் சார்ந்துள்ள கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று சிறப்பு பூஜைகளும், யாகமும் நடைபெற்றன.

பாஜக அலுவலக வரவேற்பறையில் உள்ள பாரத மாதா சிலை முன்பு நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையை புரோகிதர்கள் நடத்தினர். இந்த பூஜை, யாகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன், மூத்த தலைவர் இல.கணேசன், தேர்தல் பொறுப்பாளர் இளங்குமார் சம்பத், மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீதரன் (தென் சென்னை), கே.தனஞ்செயன் (மத்திய சென்னை), கிருஷ்ணகுமார் (வட சென்னை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய இல.கணேசன், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெல்ல வேண்டும். நாடு முழுவதும் பாஜக கூட்டணி 350-க்கும் அதிகமான இடங்களில் வென்று நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக கடவுளின் ஆசியை வேண் டிப் பிரார்த்தனை செய் தோம்” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close