[X] Close

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் விவரம்: ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டாக அறிவிப்பு; தென் தமிழகத்தை தவிர்த்த அதிமுக


admk

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 09:26 am
  • அ+ அ-

அதிமுக தலைமையிலான கூட்டணி யில் இடம்பெற்றுள்ள 8 கட்சி களுக்கான தொகுதிகள் அறிவிக் கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் 2 அணிகள் உரு வாகியுள்ளன. அதிமுக அணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. இதில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, தேமுதிகவுக்கு 4, மற்ற கட்சி களுக்கு தலா 1 என கூட்டணி கட்சி களுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.

எண்ணிக்கை அடிப்படையி லான தொகுதிப் பங்கீடு முடிந்தாலும் எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி களை ஒதுக்குவது என்பது தொடர் பாக கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து வந்தது. சில தொகுதிகளை ஒன்றுக்கும் மேற் பட்ட கட்சிகள் கேட்டதால் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து, அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு நேற்று அதி காரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் நேற்று காலை 9.45 மணிக்கு தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டனர். 

அதன்படி பாமகவுக்கு மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக் கோணம், தருமபுரி, விழுப்புரம் (தனி), கடலூர், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளும் பாஜக வுக்கு கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னி யாகுமரி ஆகிய தொகுதிகளும் தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருது நகர் ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தஞ்சையில் தமாகா, தென்காசியில் புதிய தமிழ கம், வேலூரில் புதிய நீதிக் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக களமிறங்குகிறது.

திமுகவுடன் நேரடி போட்டி

சேலம், பொள்ளாச்சி, நீலகிரி (தனி), திருநெல்வேலி, மயிலாடு துறை, திருவண்ணாமலை, காஞ்சி புரம் (தனி), தென்சென்னை ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக திமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். அதிமுக போட்டி யிடும் பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சியும், நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. திமுக போட்டியிடும் வேலூரில் புதிய நீதிக் கட்சி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி, மொத் தம் 11 தொகுதிகளில் இரட்டை இலை உதயசூரியன் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அதேபோல தருமபுரி, அரக் கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும் புதூர் ஆகிய 6 தொகுதிகளில் திமுகவுடன் பாமக நேரடியாக மோதுகிறது. பாமக போட்டியிடும் விழுப்புரம் (தனி) தொகுதியில் விசிக வேட்பாளர் ரவிகுமார் திமுக வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். எனவே, 7 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்துடன் பாமக நேரடியாக களம் காண்கிறது.

கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸு டனும் தூத்துக்குடியில் திமுக, கோவையில் மார்க்சிஸ்ட், ராமநாத புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் பாஜக மோதுகிறது. கள்ளக்குறிச்சி, வட சென்னையில் திமுகவுடனும், திருச்சி, விருதுநகரில் காங்கிரஸு டனும் தேமுதிக மோதுகிறது.

தஞ்சையில் தமாகாவும், தென்காசி (தனி) தொகுதியில் புதிய தமிழகம் கட்சியும், வேலூரில் புதிய நீதிக் கட்சியும் திமுகவுடன் மோதுகின்றன. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் நேரடியாக மோதுகின்றன.

அதிமுக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிந்த நிலை யில் 23 தொகுதிகளில் உதய சூரியன் சின்னமும், 21 தொகுதி களில் இரட்டை இலை சின்னமும் தேர்தல் களத்தில் இருக்கிறது.

பாமக, தேமுதிக புறக்கணிப்பு

அதிமுக கூட்டணி கட்சிகளுக் கான தொகுதிகள் அறிவிக்கும் நிகழ்வில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல் வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்மு கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாமக, தேமுதிக சார்பில் முக்கிய நிர்வாகிகள் யாரும் பங்கேற்க வில்லை. இதனால் அதிமுக கூட் டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே தொகுதி

நீலகிரி, நாகை, சிதம்பரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 5 தனி தொகுதிகளில் அதிமுகவும், விழுப்புரம் தனி தொகுதியில் பாமகவும், தென்காசி தனி தொகுதியில் புதிய தமிழகமும் போட்டியிடுகின்றன. கொங்கு மண்டலத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி (தனி) ஆகிய 8 தொகுதிகளில் அதிமுகவும், கோவையில் பாஜகவும் போட்டியிடுகின்றன. சென்னையை பொறுத்தவரை தென் சென்னையில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தென் தமிழகத்தில் தேனி, மதுரை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close