[X] Close

அதிமுகவுக்காக காத்திருக்கும் பாமக


pmk

  • kamadenu
  • Posted: 18 Mar, 2019 07:54 am
  • அ+ அ-

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அதிமுக நேற்று அறிவித்தது. இதில் பாமவுக்கு மத்திய சென்னை, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் (தனி), கடலூர், தருமபுரி, திண்டுக்கல் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடனும், மற்ற 6 தொகுதிகளில் திமுகவுடனும் பாமக மோதுகிறது

பாமக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவதால், விருப்ப மனுக்களைப் பெறவில்லை. நேரடியாக 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தருமபுரி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி அரக்கோணத்திலும், துணை பொதுச் செயலாளர் வைத்தியலிங்கம் பெரும்புதூரிலும், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் விழுப்புரத்திலும், கட்சியின் சொத்து பாதுகாப்பு பிரிவு தலைவர் கோவிந்தசாமி கடலூரிலும், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சாம்பால் மத்திய சென்னையிலும், பொருளாளர் திலகபாமா திண்டுக்கல்லிலும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்று மூத்த நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, ‘‘தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, பாமக வேட்பாளர்களை அறிவிக்கும்” என்றனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close