[X] Close

தோணித் தொழிலை கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்: நலிவடைந்து தள்ளாடும் தூத்துக்குடியின் பாரம்பரிய அடையாளம்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 09:11 am
  • அ+ அ-

தமிழக மக்களவைத் தேர்தலில்காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது.

மக்களவைத் தேர்தலில், திருவள்ளூர், ஆரணி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, கரூர், தேனி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றுவெளியிட்டார். அதைத் தொடர்ந்துதமிழக காங்கிரஸ் சார்பில், சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கியது. பொதுத் தொகுதிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆயிரமும், தனித் தொகுதிகளுக்கு ரூ.10 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் நபராக, தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் 2 விருப்ப மனுக்களை வாங்கினார். ஒரு மனு, கன்னியாகுமரி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடவும், மற்றொன்று சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடவும் வாங்கியிருப்பதாக கராத்தே தியாகராஜனின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் ஏராளமானோர் விருப்ப மனுக்களை வாங்கிச் சென்றனர். முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:எந்த ஒரு தொகுதியிலும் யார்வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்பதால் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. இது மிகப்பெரிய தேசிய கட்சி என்பதால், ஏராளமான நடைமுறைகள் உள்ளன. வேட்பாளரை காங்கிரஸ் தலைமையிடம் முடிவு செய்யும். இன்னும் 3 தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

ராகுல்காந்தியின் சென்னை பயணம் குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஏராளமான கேள்விகளைக் கேட்டுள்ளார். அதில் எந்தவிதமான பொருளும் இல்லை.

இலங்கை பிரச்சினைக்காக காங்கிரஸ் மற்றும் ராஜீவ்காந்தியை விட உழைத்தவர்கள் யாரும் கிடையாது. இலங்கை தமிழர்களின் அரசியல் உரிமைக்காக அந்நாட்டு அரசை பணியவைத்தவர் ராஜீவ் காந்தி.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close