[X] Close

மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் நாளை அவசர ஆலோசனை: கூட்டணி குறித்து இறுதி முடிவு


vijaykanth

விஜயகாந்த்: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 10:03 am
  • அ+ அ-

கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தேமுதிக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் களுடன் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நாளை அவசர ஆலோசனை நடத்துகிறார்.

மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 5 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தருவதாக கூறி, 2 நாட்களுக்கு முன்பே கூட்டணியை அதிமுக இறுதி செய்துவிட்டதாகவும், தற்போது தேய்பிறை என்பதால் நல்ல நாளுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

பிரதமர் நரேந்திர மோடி 6-ம் தேதி பங்கேற்கும் வண்டலூர் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களை பங்கேற்க வைக்கும் முயற்சியில் அதிமுக தலைமைதீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டம் வரும் 5-ம் தேதி (நாளை) சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் நடக்க உள்ளது. தலைமைக் கழக நிர்வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான இடைத்தேர்தலில் தேமுதிக5 தொகுதிகளை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான்கூட்டணி அறிவிப்பில் தாமதம்ஏற்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை அமாவாசை என்பதால் அன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியா கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close