[X] Close

புல்வாமா தாக்குதல் தெரிந்தும் புகைப்படம் எடுத்தாரா பிரதமர்?- காங்கிரஸ் - பாஜக கருத்து மோதல்


rahul-ji-india-is-tired-of-your-fake-news

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Feb, 2019 15:37 pm
  • அ+ அ-

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ ஷூட்டில் ஈடுபட்டிருந்தார் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அதற்கு பாஜக ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த 14-ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் பலியாகினர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் நடந்தது தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி ஃபோட்டோ ஷூட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு ட்வீட் பதிவிட்டார்.

அந்த ட்வீட்டில், "நல்ல முயற்சி. ஆனால் ஒரே ஒரு குறைதான் புல்வாமா தாக்குதல் நடந்தது தொடர்பாக மோடிக்கு தகவல் கிடைத்தும்கூட மதியம் 2.30 மணியிலிருந்து 4.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதன் பின்னர் கலந்து கொண்ட பேரணியில்கூட புல்வாமா தாக்குதல் குறித்து அவர் பேசவில்லை" எனப் பதிவிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, அந்த புகைப்படம் காலையிலேயே எடுக்கப்பட்டது என பாஜக விளக்கமளித்துள்ளது. மேலும் ராகுலுக்கு பதிலடியும் கொடுத்துள்ளது.

அந்த பதில் ட்வீட்டில், "ராகுல் அவர்களே, உங்களது போலி செய்திகளைக் கண்டு இந்த தேசம் சோர்ந்துவிட்டது. காலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இப்படி தேசத்தை தவறாக வழிநடத்தும் அவமானகரமான செயலை நிறுத்துங்கள். உங்களுக்கு வேண்டுமானால் தாக்குதல் தொடர்பாக முன் கூட்டியே தகவல் கிடைத்திருக்கலாம் ஆனால் இந்தியா முழுமைக்கும் மாலைதான் தெரிய வந்தது. அதனால் அடுத்த முறை இப்படி நமது வீரர்களின் உயிர்தியாகத்தை கிண்டல் செய்யும் விதமாக அல்லாமல் நல்லதொரு முயற்சி செய்யுங்கள்" எனப் பதிவிட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close