[X] Close

தமிழகத்தில் கூட்டணி;  பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது: மாயாவதி விளாசல்


bjp-desperate-for-poll-alliances-says-mayawati

  • நெல்லை ஜெனா
  • Posted: 20 Feb, 2019 15:57 pm
  • அ+ அ-

லக்னோ

வெற்றி பெற வாய்ப்பே இல்லாத சூழலில் பிஹார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக கூட்டணியை தேடி அலைகிறது, இது பாஜகவின் பலவீனத்தை காட்டுகிறது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக பல மாநிலங்களில் கூட்டணியை உறுதி செய்து வருகிறது. பிஹாரில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்துடனும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும், தமிழகத்தில் அதிமுகவுடனும் பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் மதவாத அணுகுமுறையால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த தேர்தலில் பாஜக தோல்வியடைவது உறுதி. உத்தர பிரதேசதத்தில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை பார்த்து பாஜக பயந்து போயுள்ளது.

இதனால் வேறு மாநிலங்களில் கூட்டணியை தேடி அக்கட்சி அலைகிறது. மகாராஷ்டிரா, பிஹார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இவர்களுக்கு வலிமை இல்லை என்பதை அவர்களே வெளிப்படுத்தி விட்டனர். எனவே தான் கூட்டணிக் கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கும் பாஜக வந்துள்ளது. இது பாஜகவின் பலவீனத்தையே காட்டுகிறது’’ என மாயாவதி கூறியுள்ளார்.  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close