[X] Close
 

வீட்டில் கருப்பு பலூன் பறக்க விட்ட மா.சுப்பிரமணியன்


black-balloon-at-ma-subramanian-s-home

  • பாரதி
  • Posted: 12 Apr, 2018 16:36 pm
  • அ+ அ-

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பத்தில் மத்திய அரசு தாமதம் செய்வதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டது.

தமிழக எதிர்க்கட்சியான திமுக சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை பிரதமர் வருவதற்கு முன்னதாகவே விமான நிலையத்தை அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் முற்றுகையிட்டனர்.

கருப்புக் கொடி போராட்டத்தால் பிரதமரின் பயணம் ஹெலிகாப்டர் மார்க்கவே இருந்தது. இந்நிலையில், ஹெலிகாப்டரில் பிரதமர் செல்கிறார் என்பதால் அவரது கவனத்தை ஈர்க்கவும் அவருக்கு கண்டனம் தெரிவிக்கவும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை மாநகர முன்னாள் மேயரும் திமுக பிரமுகருமான மா.சுப்பிரமணியன் தனது வீட்டின் மாடியில் Go Bac Modi என்று எழுதப்பட்ட மிகப்பெரிய கருப்பு பலூனை பறக்கவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close