[X] Close
 

இந்திய அளவிலிருந்து உலகளவில் முதலிடத்துக்கு முன்னேறிய #GoBackModi


gobackmodi-in-world-trend

  • பாரதி
  • Posted: 12 Apr, 2018 12:49 pm
  • அ+ அ-

#GoBackModi ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகிவந்த நிலையில் தற்போது சர்வதேச அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகத் தொடங்கியுள்ளது. இந்த ஹேஷ்டேகானது தமிழில் #ஓடிப்போமோடி என ட்ரெண்ட் செய்யப்படுகிறது.

பலத்த எதிர்ப்புக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) சென்னை வந்துள்ள நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் ட்விட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

திவ்யாவும், ராகுலும் காரணம்..

இதற்கிடையில், ட்விட்டரில் #GoBackModi ட்ரெண்டாகக் காரணம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் சமூகவலைதள ஒருங்கிணைப்பாளர் திவ்யா ஸ்பந்தனாவும்தான் என பாஜக உறுப்பினரான காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close