[X] Close

ஹாட்லீக்ஸ்: யாரைப் பார்த்து கையாட்டினார் மோடி?


hotleaks-modi

மோடி

  • kamadenu
  • Posted: 10 Feb, 2019 09:24 am
  • அ+ அ-

பிப்ரவரி 4-ல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் சென்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. 

அங்குள்ளதால் ஏரியில் அவர் படகு சவாரி செய்த படங்களை செய்தித்துறை சுடச் சுட வெளியிட்டது. 

அவற்றில், படகில் நின்றபடி மோடி கைகாட்டும் படங்களும் இருந்தன. 

ஆனால், அவர் கையாட்டிய திசையில் ஒருவர்கூட இல்லை. அப்படியானால் யாரைப் பார்த்து மோடி கையாட்டினார் என்று கேள்வி எழுப்ப இது ஜம்மு -காஷ்மீரில் பெருத்த சர்ச்சையானது. 

அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களாக மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைகள் இதை கிண்டல் செய்த ட்வீட்டுகள் வைரலாகின. ஆனால், இதற்கு பதில் சொல்லத்தான் பாஜகவில் ஒருவரும் இல்லை!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close