[X] Close

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தகவல் 


anbumani-speech

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 08:30 am
  • அ+ அ-

அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், முடிவு வந்தவுடன் அறிவிக்கப்படும் என்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக கம்யூனிஸ்ட்கள், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கூட்டணி உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. இதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது உறுதியாகியுள்ளது. கூட்டணியில் தேமுதிகவையும், பாமகவையும் சேர்க்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கான பேச்சு வார்த்தையில் அதிமுக, பாஜக முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள னர்.

இந்நிலையில், வடசென்னை யில் பாமக அலுவலக திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை அன்புமணி சந்தித்தார். அவரிடம், ‘மக்களவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும்? அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளதே’ என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அன்புமணி, ‘‘பேசிக் கொண்டிருக்கிறோம். முடிவுகள் வந்தவுடன் உங்களுக்கு தெரிவிப்போம்’’ என்றார்.

அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் இனிமேல் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று ராமதாஸும், அன்புமணியும் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். திமுக, அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வந்தனர். மத்தியில் உள்ள பாஜக அரசையும், தமிழகத்தில் உள்ள அதிமுக அரசின் செயல்பாடுகளையும் ராமதாஸ் தொடர்ந்து கண்டித்தும் விமர்சித்தும் வந்தார்.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்த பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்தது. தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close