[X] Close

சர்ச்சைக்குரிய மசோதாக்கள் வேண்டாம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நிபந்தனை


opposition-insists-controversial-bills-shouldn-t-be-taken-up

  • நெல்லை ஜெனா
  • Posted: 31 Jan, 2019 21:12 pm
  • அ+ அ-

புதுடெல்லி

பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு சர்ச்சை இல்லாத மசோதக்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

''மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதிய சட்டங்கள், சிறப்பு புலனாய்வு குழுக்கள், வெளிநாடுகளுடன் வரித்தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைச் செய்து கறுப்புப் பணம், ஊழலுக்கு எதிராகப் போர் புரிந்துள்ளது. கறுப்புப் பணத்தை தடுக்க பல்வேறு கடினமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டின் உண்மையான பொருளாதாரத்துக்கு இணையாகக் கறுப்புப் பணம் மூலம் நிழல் பொருளாதாரம் இருந்ததை வேருடன் அகற்ற இந்த முடிவு எடுக்கப்பட்டது’’ எனக் கூறினார்.

இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நாளை தாக்கல்செய்கிறார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டாக இது. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அரசு கோரியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்,

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய அரசு சர்ச்சைகள் இல்லாத மசோதாக்கள் மட்டுமே எடுக்க வேண்டும், தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுமட்டுமின்றி அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை வலியுறுத்தியுள்ளன.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close