[X] Close

எங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?- குமாரசாமி 


operation-kamala-is-still-on-last-night-they-bjp-offered-one-of-our-mlas-huge-amount-of-money

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Jan, 2019 12:33 pm
  • அ+ அ-

எங்கள் எம்.எல்.ஏ.,வுக்கு பாஜக தருவதாக சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா? என பத்திரிகையாளர் சந்திப்பில் பரபரப்பாக பேசியிருக்கிறார் கர்நாடகா முதல்வர் குமாரசாமி.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

இந்நிலையில், ஆபரேஷன் கமலா என்ற பெயரில் எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் குதிரை பேரம் நடக்கிறது என்று மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார் முதல்வர் குமாரசாமி. அவருக்கு கர்நாடகா பாஜக தலைவர் எடியூரப்பா பதிலடி கொடுத்திருக்கிறார்.

முன்னதாக முதல்வர் குமாரசாமி, "ஆபரேஷன் கமலா இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது. நேற்றிரவு எங்கள் எம்.எல்.ஏ., ஒருவருக்கு பாஜக மிகப்பெரிய தொகையைத் தர முன்வந்தது. அது எவ்வளவு தொகை எனத் தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். ஆனால், எங்கள் எம்.எல்.ஏ., தனக்கு எவ்விதப் பரிசும் வேண்டாம் இனி இதுபோன்று தன்னை அணுக வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இப்படித்தான் அவர்கள் இன்னும் குதிரைபேரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்" என்றார்.

இதற்கு பதிலளித்த கர்நாடக பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பா, "நாங்கள் எந்த ஆபரேஷனிலும் ஈடுபடவில்லை. அவர்களது எம்.எல்.ஏ.,க்கள் உட்கட்சி பூசல்களில் இருந்து தப்பிக்க விரும்புகின்றனர். அவர்களை கட்டுக்குள் வைத்துக்கொள்வது குமாரசாமி கட்சியின் கடைமை. அதேவேளையில் பாஜகவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும். எங்களிடம் 102 எம்.எல்.ஏ.,க்களின் பலமும் மேலும் 2 சுயேட்சைகளின் ஆதரவும் இருக்கிறது" என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close