[X] Close

மதம் மாறலாம் சாதி மாற முடியுமா?- 10% இடஒதுக்கீடை எதிர்த்து கனிமொழி வலுவான குரல்


kanimozhi-on-reservation-bill

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jan, 2019 10:18 am
  • அ+ அ-

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி வலுவாக குரல் கொடுத்தார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கு(பொதுப்பிரிவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் புதன் கிழமை இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக எம்.பி. கனிமொழி, இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து காட்டமாக தனது கருத்துகளை பதிவு செய்தார்.

"எதன் அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது? எனக்கு இப்போது இந்த சட்ட மசோதாவுக்கான எந்த அவசரமும் தெரியவில்லை. ஒரே அவசரம் மக்களவை தேர்தல் வருவதால் இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

மத்திய அரசு தன்னிச்சையாக எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்து அவற்றை மக்கள் மீது திணிக்கலாம் என நினைக்கிறது.

நான் பெரியார் மண்ணில் இருந்து வருகிறேன். எனது மண் பெண்களுக்கு வாக்குரிமை முதல் மாநிலம். எனது மாநிலம் சமூக நீதியால் நிறைந்தது. கருணாநிதிதான் முதன்முதலில்  பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தை உருவாக்கினார்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது வரலாற்றுத் தவறாக அமையும். படிக்கும், பணிபுரியும் இடங்களில் பட்டியலின மக்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்பை கருத்தில் கொள்ள வேண்டும். நாட்டில் இன்றும் சாதிய ரீதியான பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

நாட்டில் ஒருவர் மதம், பொருளாதாரத்தை மற்றிக்கொள்ள முடியும் ஆனால் சாதியை மாற்ற முடியாது" என்று கூறினார்.

நேரம் முடிந்துவிட்டது என்று கூறி கனிமொழியை பேசி முடிக்குமாறு துணை சபாநாயகர் இந்தியில் கூறினார். அதற்கு கனிமொழி, "எனக்கு புரியும் மொழியில் பேச முடியுமா?" என்று கேட்க, பின்னர் துணை சபாநாயகர் ஆங்கிலத்தில் பேசினார்.

 

 

இதேபோல், மசோதாவை ஆதரித்து தமிழகத்தைச் சேர்ந்த சிபிஎம் எம்.பி ரங்கராஜன் பேசும் போதும், "இதென்ன அநியாயமாக இருக்கிறது?" என்று அவரிடம் ஆவேசமாக கனிமொழி வாதிட்டார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close