[X] Close

ஹாட்லீக்ஸ்: பூண்டி கலைவாணனுக்கு கட்டையைப் போடுறாங்க!


hotleaks-tiruvarur

மு.க.ஸ்டாலின் - பூண்டி கலைவாணன்

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 10:30 am
  • அ+ அ-

திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை நியமித்திருக்கிறது திமுக.

 அண்மையில் திருவாரூரில் திமுகவினரை அழைத்து ஆலோசனைக் கூட்டம் போட்டார் நேரு. 

அந்தக் கூட்டத்தின் முடிவில், ‘திருவாரூர் தொகுதியில் 35 சதவீதத்துக்கும் மேலாக பட்டியல் இனத்து மக்கள்தான் இருக்கிறார்கள். அதனால்தான் இந்தத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி பல முறை வென்றிருக்கிறது. கலைஞர் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கக் காரணமும் அதுதான். 

இந்த நிலையில், கள்ளரான பூண்டி கலைவாணனுக்கு இங்கே ஸீட் கொடுத்தால் தொகுதியைத் தக்கவைக்க ரெம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும்’ என்று திமுக பொறுப்பாளர்கள் சிலர் நேருவிடம் கருத்துத் தெரிவித்தார்களாம். 

இந்தக் கருத்தை அப்படியே அறிக்கையாகத் தயாரித்து ஸ்டாலினிடம் தந்திருக்கிறாராம் நேரு. கலைவாணன் இங்கே வெற்றி பெற்றால் அடுத்த பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற்று அமைச்சர் பதவிக்கு அடி போடுவார். 

மாவட்டச் செயலாளராக இருப்பதால் அவருக்கு அது சாத்தியமும் ஆகும். அப்படி நடந்தால் தனது வாரிசுக்கு அமைச்சராகும் வாய்ப்புத் தடைபடுமே எனக் கணக்குப் போடும் முக்கியப் புள்ளி ஒருவரும் கலைவாணனுக்கு எதிராக கட்டையைப் போடுகிறாராம்!

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close