[X] Close

மேலாண்மை வாரியமும் மேற்பார்வை குழுவும் ஒன்றுதான்: தமிழிசை தகவல்


cauvery-management-board-tamilisai

தமிழிசை | கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 27 Mar, 2018 11:28 am
  • அ+ அ-

காவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருச்சி வந்த அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

அண்டை மாநிலமான புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை சட்டப்பேரவைக்குள் நுழையவிடாமல் சபாநாயகர் தடுத்தது தவறான நடைமுறை. திமுக மாநாட்டில் முன்னணி பேச்சாளர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் தரக்குறைவாக பேசியிருக்கிறார். அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த பேச்சாளர் மீது பாஜக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எம்பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக கூறிவருகிறது. முதலில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள், எம்பி-க்கள் ராஜினாமா செய்யட்டும்.

பாஜக எதிர்ப்பு மாநாடு

முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “ஈரோட்டில் மண்டல மாநாடு என்ற பெயரில் பாஜக எதிர்ப்பு மாநாட்டை திமுக நடத்தியுள்ளது.

நாத்திக அரசியலில் இருந்து ஆத்திக அரசியலுக்கு தமிழ்நாடு மாறும். பாஜக வலுப்பெற்று வருகிறது. சென்னையில் வரும் ஏப்.8-ம் தேதி மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளோம்.காங்கிரஸ் ஆட்சியிலும் விமான நிலையத்தில் டீ, காபி விலை ப.சிதம்பரம் கூறுவது போலத்தான் இருந்தது. காங்கிரஸ் கட்சியினர் ஆளும்போது ஒருவிதமாகவும், ஆட்சியை இழந்த பிறகு ஒருவிதமாகவும் பேசுவார்கள் என்பதற்கு ப.சிதம்பரம் உதாரணம்” என்றார்.

இரண்டும் ஒன்றுதான்

தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட பாஜக சார்பில், சக்திகேந்திரா நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற தமிழிசை சவுந்தர்ராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

பாஜக ஆட்சியில் தஞ்சாவூருக்கு நல்ல பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நவீன நகரமாக அறிவிக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத் தால் என்ன? காவிரி மேற்பார்வைக் குழு வை அமைத் தால் என்ன? இரண்டும் ஒன்றுதான்.

காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை எடுத்துக் கூற தமிழகத்தில் இருந்து பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், பொன்.விஜயராகவன், கருப்பு முருகானந்தம் ஆகிய 3 பேரை டெல்லிக்கு அனுப்ப உள்ளோம். இவர்கள், காவிரி தொடர் பான விரிவான தகவல்களை தெரிவிப்பார்கள் என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close