[X] Close

நடப்பது அரசியல் நாடகம்: சுப.வீ-க்கு எச்.ராஜா பதில்


h-raja-s-reply-to-suba-vee

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Dec, 2018 13:41 pm
  • அ+ அ-

ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய வேண்டி திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன் பதிவு செய்த ட்வீட்டுக்கு பதில் ட்வீட் பதிவு செய்திருக்கிறார் பாஜக தேசிய செயலர் எச்.ராஜா.

முன்னதாக சுப.வீ தனது ட்விட்டர் பக்கத்தில், "இளமையும், காலமும் எரிந்து போவதோ? என்றும் கொடுஞ் சிறையில் வாழ்வதோ? விடுதலை செய்க, விடுதலை செய்க, ஏழு தமிழரை விடுதலை செய்க #28YearsEnoughGovernor" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக எச்.ராஜா, "அன்று ராஜிவ் காந்தி மட்டுமே கொல்லப்படவில்லை. 14 அப்பாவி தமிழர்களும் கொல்லப்பட்டனர். அன்று எரிந்து போன அத்தமிழர்கள் பற்றியோ அந்த குடும்பங்களின் தவிப்பை பற்றியோ உங்கள் கூட்டம் ஒரு நாளாவது பேசியதுண்டா. நடப்பது ஒரு அரசியல் நாடகம்" எனப் பதிவிட்டார்.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கிலிருந்து மூவர் விடுதலையை கண்டித்தும் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையை வேண்டியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோவில்பட்டியில் செய்தியாளர்கள் பேசியதையும் எச்.ராஜா கண்டித்து ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close