[X] Close

கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனுக்கு காங்கிரஸில் புதிய பதவி: செகந்திராபாத் தொகுதியில் போட்டி?


mohammad-azharuddin

படம்: ட்விட்டர்

  • நெல்லை ஜெனா
  • Posted: 30 Nov, 2018 16:15 pm
  • அ+ அ-

புதுடெல்லி

தெலங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எம்.பியானார். 2009-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இருப்பினும் அசாருதீன் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். வரும் 2019-ம் ஆண்டு செகந்திராபாத் தொகுதியில் காஙகிரஸ் சார்பில் போட்டியிட அவர் விரும்புகிறார். இந்தநிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல்தலைவராக அசாருதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலுடன் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இதுமட்டுமின்றி தெலங்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில் டிசம்பர் -7ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close