[X] Close

திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா?- ஸ்டாலினுக்கு வைகோ கேள்வி


vaiko-questions-stalin

  • kamadenu
  • Posted: 26 Nov, 2018 14:34 pm
  • அ+ அ-

மு.அப்துல் முத்தலீஃப்

துரைமுருகன் திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என்று பேட்டி அளித்ததை சுட்டிக்காட்டி திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா? என ஸ்டாலினுக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் நெருக்கமாக இருந்த வைகோ தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மதிமுகவை தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்து போட்டியிடவில்லை. 

2014 பாராளுமன்ற தேர்தலில் திமுகவை, அதிமுகவை எதிர்த்து பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு எதிராக விஜயகாந்த தலைமையில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

இந்நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திமுகவுடன் வைகோ நெருக்கமானார். அதன்பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் வரவேண்டும் அவர் அடுத்த முதல்வராக வர பாடுபடுவேன் என்று அறிவித்தார். பின்னர் திமுக கூட்டணியில் மதிமுக இணைகிறது என்று அறிவித்தார். 

இந்நிலையில் சமீபத்தில் துரைமுருகன் அளித்த பேட்டி வைகோவை கோபமடையச் செய்துள்ளது. இதையடுத்து இன்று ஸ்டாலினுக்கே நேரடியாக கேள்வியை வைத்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அளித்த பேட்டி:

“மதிமுகவும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியில் உள்ளதா? என்று துரைமுருகனிடம்  கேள்வி. அவர்கள் எங்கள் கூட்டணியில் இல்லை என்பது திமுக பொருளாளர் துரைமுருகனின் பதில்.

தமிழ்நாடு முழுதும் உள்ள எங்கள் கட்சியினர் மிகவும் மன வருத்ததில் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் அனைவரும் மன வருத்தத்துடன் இருக்கிறோம். நாங்கள் மிகவும் கட்டுபாடானவர்கள். நாங்கள் தன்மானத்துக்காகவும், கௌரவத்துடனும், சுயக்கட்டுப்பாட்டுக்காகவும் வாழ்பவர்கள். 

தன்மானத்தைவிட இயக்கம் பெரிது, என் தன்மானத்தைவிட ஈழ விடுதலை எனக்கு முக்கியமானது, என் தன்மானத்தைவிட தமிழக நலன் பெரிது. அப்ப்டொயென்றால் திமுக பொருளாளர் துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே என கேட்கலாம். திமுகவின் தலைவர் கருத்து என்னவென்று அவர் சொல்லட்டும்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை இத்தோடு நான் விடுகிறேன். நான் நேற்றிலிருந்து இந்தப்பிரச்சினையை ஊடகங்கள் கேட்டால் சொல்லலாம் என்றிருந்தேன்.” இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close