[X] Close

திரும்பிப் பார்க்கிறோம் 2018: மீண்டும் இந்தியாவில் வலம் வரும் கனவு பைக் ‘ஜாவா’ - ஆடிப்போன அமேசான் நிறுவனர்


events-of-2018

  • kamadenu
  • Posted: 30 Dec, 2018 15:32 pm
  • அ+ அ-

2018-ம் ஆண்டு விடை பெறுகிறது. அரசியல், சமூகம், தனிமனித வாழ்க்கை என பல துறைகளிலும் ஏற்றமும், இறக்கமும் வழக்கம்போல் கடந்து சென்றுள்ளன. அந்த வரிசையில் வணிகத்துறையிலும் 2018-ம் ஆண்டில் வணிகத்துறையிலும் தடம் பதித்து கடந்து போன சில பதிவுகளை பார்க்கலாம்.

ஜூலை

மார்க் ஜூகர்பெர்க் சாதனை

பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனரான மார்க் ஜூகர்பெர்க் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் நிறுவன பங்கு விலை 2.4 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து இவரது சொத்து மதிப்பு உயர்ந்தது. இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பணக்காரர் வாரன் பஃபெட்டை விட இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இத்தகவல் புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய இந்தியா

உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட, ஜிடிபி எனப்படும் உள்நாட்டு உற்பத்தி அதிகம்  கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸை பின்னுக்குதள்ளி 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமான ஜிடிபியை பொறுத்து அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதமாக குறிப்பிடப்படுகிறது. இதன்படி, அதிகமான உள்நாட்டு உற்பத்தி கொண்ட நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டு வருகிறது இதில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி நான்காவது இடத்திலும் உள்ளன. இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் பிரான்ஸ் இருந்து வந்தன.

ஆகஸ்ட்

நீண்டகால இன்சூரன்ஸ் திட்டம்

சாலை விபத்துகள் ஏற்படும்போது அந்த வாகனங்களில் பயணம் செய்யாமல் சாலைகளில் நடந்துபோவோர், பாதசாரிகள், மற்ற வாகனங்களில் செல்வோர் என பலருக்கும் காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற மூன்றாம் நபர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் விதிமுறைகள் படி இழப்பிடு வழங்க வகை செய்யப்படுகிறது.

மோட்டார் வாகனச் சட்டப்படி ‘தேர்டு பார்ட்டி’ எனப்படும் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ்  கட்டாயம். அனைத்து வாகனங்களுக்கும் இந்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும். ஆனால் பல வாகனங்கள் இந்த இன்சூரன்ஸ் தொகையை கட்டாததால் விபத்து ஏற்படும்போதும் பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து மொத்தமாக இந்த தொகையை வண்டி விற்பனை செய்யும்போதே வசூலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

வாகனங்கள் விற்பனை செய்யும்போதே நீண்டகால அடிப்படையில் இதனை செயல்படுத்தவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

செப்டம்பர்

ஓய்வு பெற்ற அலிபாபா நிறுவனர் ஜாக் மா
  
சீனாவின் மிகப்பெரிய பணக்கார ரான ஜாக் மா தனது அலிபாபா நிறுவனத்திலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித் துள்ளார். முன்னாள் ஆங்கில ஆசிரி யரான ஜாக் மா, ஒருகாலத்தில் ஆங்கிலம் பேச வராத காரணத் தினால் வேலை கிடைக்காமல் திண் டாடியவர். 1999ல் தன்னுடைய மாணவர்களை வைத்து தொடங் கியதுதான் அலிபாபா நிறுவனம்.

ஜாக் மா இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார்.  கல்வித்துறையை மேம்படுத்தும் தன்னார்வப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்தார். பின்னர் அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார்.

தப்பிச்சென்ற மற்றொரு தொழிலதிபர்
  
குஜராத்தைச் சேர்ந்த ஸ்டெர் லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளரான நிதின் சந்தேசரா, அவரது உறவினர்களும் ரூ. 5,000 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட தாகக் குற்றம் சாட்டப்பட்டனர். இவர் கள் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இதையடுத்து ஜூன் மாதம் அமலாக்கப்பிரிவினர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ககன் தவானையும், அனுப் கார்கையும் இந்த வழக்கில் கைது செய்தனர். மேலும் ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத் தின் ரூ. 4,700 கோடி சொத்துகளை யும் பறிமுதல் செய்தனர். ஆனாலும் முக்கியக் குற்றவாளியான நிதின் சந்தேசரா தப்பிச் சென்றார்.

கச்சா எண்ணெய் விலை உச்சம்

ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சவுதி அரேபியா மற்றும் ரஷ்ய நாடுகள் புறக்கணித்துள்ளன. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை செப்டம்பர் மாதம்  பேரல் 81.48 டாலர்களாக உயர்ந்தது.

முதலிடத்தில் முகேஷ் அம்பானி
 
போர்ப்ஸ் இதழின் இந்த ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. இதன் மூலம் தொடர்ந்து 11-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத் துள்ளார். இந்த ஆண்டு மட்டும் அவரது சொத்து மதிப்பு ரூ. 70 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது. இந்தவகையிலும் முதலிடத்தில் இவரே உள்ளார்.

இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி ரூ. 1.5 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளார். ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் ரூ. 1.3 லட்சம் கோடி சொத்துடன் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹிந்துஜா சகோதரர்கள் நான் காம் இடத்திலும், பாலோன்ஜி மிஸ்திரி ஐந்தாம் இடத்திலும் உள்ளனர்.

விலையில் பெட்ரோலை மிஞ்சிய டீசல்

ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.

இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் செப்டம்பரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.
 
அக்டோபர்

ஆடிபோன அமேசான் நிறுவனர்

ஆன்லைன் வர்த்தகத்தில் பல கோடி ரூபாய் குவித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து கோலோச்சி வரும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்கு இரண்டு நாளில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதுமட்டுமின்றி அமெரிக்க பணக்காரர்கள் பலருக்கும் இதே போன்ற நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் பங்குச்சந்தைகளில் ஐடி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. இதில் ஜெப் பெசோஸ் நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவை சந்தித்தன.புளூம்பெர்க் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 500 பேரின் சொத்து மதிப்புகள் 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 99 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது.

பொருளாதார தடை: பின்வாங்கிய அமெரிக்கா

இந்தியா-ஈரான் இடையிலான வர்த்தகம் தடையில்லாமல் நடக்க அமெரிக்கா வழிவகை செய்துள் ளது. ஈரான் மீதான பொருளாதாரத் தடையில் இந்தியாவுக்கு இருந்த முக்கியமான தடைகளை அமெ ரிக்கா விலக்கிக் கொண்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை நவம்பர் 5-ம் தேதியிலிருந்து ஆரம்பித்த நிலையில், இந்தியாவுக்கு உள்ள சில முக்கிய தடைகளை நீக்கியது. இந்த முடிவு ஈரான் மீதான பொரு ளாதார தடை அமலுக்கு வருவ தற்கு முதல் நாள் ட்ரம்ப் நிர்வாகத் தினால் எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

போர்களால் நிலைகுலைந்து போயிருக்கும் ஆப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓமன் வளைகுடாவில் அமைக்கப் படும் சபார் துறைமுகம் மற்றும் ரயில் பாதை கட்டமைப்புகளில் இந்தியாவின் பங்களிப்பு முக்கியமாக இருப்பதை உணர்ந்த அமெரிக்கா, இந்தியா மீது விதித்த தடைகளை விலக்கிக் கொண்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனர் மீது பாலியல் புகார்
 
 ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் சமீபத்தில் வாங்கியது. சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியது. இதன் பிறகும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் பின்னி பன்சால்

தொடர்ந்தார். இந்தநிலையில் அவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்த சம்பவம் பிளிப்கார்ட் நிறுவனத்தையே அதிர்ச்சியடைய வைத்தது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான அந்த பெண் 2016-ம் ஆண்டு பின்னி பன்சால் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்தாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவர் மூலம் இந்த புகார் கூறப்பட்டதாக தெரிகிறது.

என்பீல்டை மிஞ்சுமா ஜாவா?

இந்தியாவில் 1970-களில் இருசக்கர வாகன ஓட்டிகளின் மனதை கவர்ந்த வாகனங்களில் முக்கியமானது ஜாவா. சீறிப் பாயும் ஜாவாவுக்கு என ரசிகர்கள் கூட்டம் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் ஜாவா மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஜாவா மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்தது. புதிய ஜாவா மோட்டார் சைக்கிள் 293 சிசி திறன் இன்ஜினுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. 27 பிஎச்பி திறனுடன், பியூயல் இன்ஜக்‌ஷன் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. புதிய மோட்டார் சைக்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close