[X] Close

திரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக அளவில் வேகமாக வளரும் 3 தமிழக நகரங்கள்; பணம் அனுப்புவதில் முதலிடம் வகிக்கும் இந்தியர்கள்


world-events

  • kamadenu
  • Posted: 29 Dec, 2018 14:28 pm
  • அ+ அ-

நெல்லை ஜெனா

2018-ம் ஆண்டு விடை பெறுகிறது. அரசியல், சமூகம், தனிமனித வாழ்க்கை என பல துறைகளிலும் ஏற்றமும், இறக்கமும் வழக்கம்போல் கடந்து சென்றுள்ளன. அந்த வரிசையில் வணிகத்துறையிலும் 2018-ம் ஆண்டில் வணிகத்துறையிலும் தடம் பதித்து கடந்து போன சில பதிவுகளை பார்க்கலாம்.

தொடர்ச்சி...3

நவம்பர்

பிளிப்கார்ட்டை முந்திய அமேசான்
  
இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் நீண்டகால சாதனையாளராக விளங்கிய பிளிப்கார்ட்டை அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் விற்பனையில் முந்தியுள்ளது.

2018-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஓராண்டு விற்பனை 45 ஆயிரம் கோடியாக உள்ளது. அதேசமயம் அமேசான் இந்தியாவின் விற்பனை 54 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்தது.

முன்னேறிய மைக்ரோசாப்ட்
  
அமெரிக்காவில் பங்குச்சந்தை அடிப்படையில் அதிக சொத்து கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக முதன்முறையாக ஆப்பிள் நிறுவனத்தினத்தை பின்னுக்கு தள்ளி மைக்ரோசாப்ட் முன்னேறியது.

இரு நிறுவனங்களுக்கும் இடையே சொத்து மதிப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போட்டி நிலவினாலும் முதல் இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்து வந்தது ஆப்பிள்.

இந்தநிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஆப்பிளை விட உயர்ந்தது பங்கு வர்த்தக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

டிசம்பர்

‘ஒபக்’கில் இருந்து வெளியேறிய கத்தார்

எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்கில்’ இருந்து வெளியேறப்போவதாக கத்தார் திடீரென அறிவித்தது.

கத்தாரின் இந்த முடிவு பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள கத்தார் அதனை அதிகரிக்கப்போவதாகவும், கச்சா எண்ணெய் உற்பத்தியை கணிசமாக உயர்த்த போவதாக கூறியுள்ளதும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் சந்தையில் கோலோச்சும் சவுதிக்கு ‘செக்’ வைக்கவும், அதேசமயம் தனக்கான இடத்தை நிலை நிறுத்தவும் ஈரான் பாணியில் பயணத்தை தொடங்க கத்தார் திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் சந்தையில் கத்தாரின் பங்கு மிக குறைவு என்றாலும், இயற்கை எரிவாயு சந்தையில் முதலிடத்தில் உள்ள கத்தாரின் நடவடிக்கை தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

கத்தார் எடுத்துள்ள முடிவு துணிச்சலானது என்றும், அரபு நாடுகளின் புறக்கணிப்புக்கு பிறகு அதன் பொருளாதார வலிமை குறையவில்லை என்பதை காட்டும் விதத்தில் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

வேகமாக வளரும் தமிழகத்தின் 3 நகரங்கள்
  
பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகள் குறித்து ஆக்ஸ்போர்டின் தலைமை உலகளாவிய நகரங்கள் ஆராய்ச்சி பிரிவு ஆய்வு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு முதல் 2035 ஆண்டுக்குள் அதிகமான பொருளாதார வளர்ச்சி அடைய வாய்ப்பு நகரங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்துள்ளது.

இந்த பட்டியலில் 2035-ம் ஆண்டுகளுக்குள் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும், வேகமாக வளர்ச்சி அடையும்  நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இதில் தமிழகத்தின் திருப்பூர், திருச்சி, சென்னை  3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

டாலர் வேண்டாம் இனி ரூபாயில் இனி வர்த்தகம்

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வர்த்கத்தின்போது, சொந்த நாட்டு பணத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் டாலர் மதிப்பில் வர்த்தகம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் இனி இருக்காது. இந்திய வர்த்தகர்களும் இந்திய ரூபாய் மதிப்பில் இந்திய சந்தைகளை கணக்கீட்டு ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் செய்ய இயலும். இதுபோலவே தங்கள் சொந்த நாட்டு நாணயத்தை கணக்கில் கொண்டு இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கவோ, விற்கவோ அந்நாட்டால் முடியும்.

புதிய பொருளாதார ஆலோசகர்

நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியின் நிதித்துறை பேராசியராக உள்ளார்.

இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவிக் காலம் முடிவதற்கு முன்பே, தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு இந்தப் பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை.

பணம் அனுப்புவதில் முதலிடம் வகிக்கும்  இந்தியர்கள்

தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவுதில் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்து இந்தியர்கள் சாதனை படைக்கின்றனர். 2018-ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் தொகை சுமார் 6 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

இந்த பட்டியலில் சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 4 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா நாடுகள் உள்ளன.

டிசம்பர்

பதவி விலகிய உர்ஜித் படேல்
  
ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கூடுதல் இருப்புத் தொகையை மத்திய அரசு கேட்பதாக தகவல் வெளியானதையும் மத்திய அரசு மறுத்தது. மேலும், எப்போதும் இல்லாத வகையில் ஆர்பிஐ சட்டத்தைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை அழைத்து இந்த விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பி அழைத்துப் பேசியது. இந்தச் சம்பவங்களால் ரிசர்வ் வங்கி, மத்திய அரசுக்கும் இடையிலான உறவில் உரசல் இருந்து வந்தது.

இந்தச் சூழலில் கடந்த இரு நாட்களுக்கு முன் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக உர்ஜித் படேல் அறிவித்தார். முன்னாள் பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகந்த தாஸை புதிய ஆளுநராக  மத்திய அரசு நியமித்தது.

(முற்றும்)

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close