[X] Close
 

இன்று உலக மாதவிடாய் தினம்: ரியல் ‘பேட் மேன்’ பற்றி அறிந்து கொள்வோம்


awareness-on-sanitary-napkins-still-low-in-rural-areas-india-s-real-pad-man

  • kamadenu
  • Posted: 28 May, 2018 17:38 pm
  • அ+ அ-

இன்று உலக மாதவிடாய் தினம். மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகின்றது. மாதவிடாயின் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம், அந்நாட்களில் பெண்களுக்கு தேவையான உணவு, ஆரோக்கியம், புற சுகாதாரம் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவது ஒரு சமூகத்தின் அவசியமாகும். 

அப்படி, சானிட்டரி நாப்கின்களை உருவாக்கி இந்தியா முழுவதும் அதனை பரவச் செய்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் குறித்து அறிந்து கொள்ளுவோம். மாதவிடாய் நேரங்களில் தமிழக ஏழைப் பெண்கள் குறைந்த செலவில் நாப்கின்களை பயன்படுத்தும் வகையில் மெஷின் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனைப் புரிந்தவர் தமிழர் அருணாச்சலம் முருகானந்தம்.
ஆரம்பத்தில் பென்களிடம் சானிட்டரி நாப்கின்கள் குறித்து அருணாச்சலம் முருகானந்தம் கேள்வி எழுப்பிய போது, அவரை முறையற்ற நடத்தைக் கொண்டவர் என நினைத்தனர். ஆனால், அவர் கேட்ட கேள்வியால் தான் மலிவான விலையில் ஆரம்பத்தில் தன் மனைவிக்காக சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க ஆரம்பித்து, அதன்பின்பு உலகம் முழுவதும் கிராமப்புறங்களில் பெண்கள் அதனை பயன்படுத்தும் அளவுக்கு புரட்சி செய்தார் அருணாச்சலம் முருகானந்தம்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த முருகானந்தம் தன்னுடைய இலக்கை அடைய இன்னும் பல மைல்கள் பயணிக்க  வேண்டும் என கூறுகிறார். ”மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனைவருக்கும் சுகாதாரத்தை ஏற்படுத்துவது தான் என் இலக்கு”, என்கிறார்.

”என்னுடைய மனைவி சாந்திக்காகத் தான் ஆரம்பத்தில் இந்த பயணத்தை ஆரம்பித்தேன். ஆனால், இது இப்போது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது, புரட்சியாக உருவெடுத்திருக்கிறது. என்னுடைய இலக்கு இந்த தூரத்தை அடைந்திருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்கிறார் முருகானந்தம்.

”மக்கள் நிச்சயமாக மாதவிடாய் குறித்த விஷயங்களில் மாறியிருக்கின்றனர். மாதவிடாய் சுகாதாரம் குறித்து வெளிப்படையாகவே உரையாடுகின்றனர். 20 வருடங்களுக்கு முன்பு இதுகுறித்து பேச யாருக்கும் தைரியமில்லை. மாதவிடாய் குறித்த சமூக அவலம் தகர்ந்து விட்டது. ஆனால், இந்தியா மெட்ரோ நகரங்களால் ஆனது மட்டுமல்ல. இந்தியாவில் 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. ஆனால், விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் அனைவருக்கும் சுகாதாரத்தை ஏற்படுத்தும் இலக்கை அடைய இன்னும் பல மைல்கள் கடக்க வேண்டும்” என்கிறார் முருகானந்தம்.

எல்லோரும் ‘பேட் மேன்’ ஆக முடியும் என முருகானந்தம் நம்புகிறார்.

“இன்னும் நிறைய பேட் மேன்களை உருவாக்க வேண்டும் என்பதை என்னுடைய கடமை என நினைக்கிறேன்” என தெரிவிக்கிறார் முருகானந்தம். ஆனால், வீட்டிலுள்ள காட்டன் துணி உள்ளிட்டவற்றை தன் மனைவி உள்ளிட்ட பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தி நோய் தாக்கத்திற்கு ஆளாகக் கூடாது என்பதை தான் உறுதிசெய்ய வேண்டும் என நினைக்கிறார்.

முருகானந்தம் தன் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர். அவருக்கென யாரும் ஆதரவும் இல்லை. பணம், சமூகத்தில் எந்த விதமான அந்தஸ்தும் இல்லாதவராக முருகானந்தம் இருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை புறக்கணிக்க ஆரம்பித்தனர். இன்னும் சிலர் அவருக்கு பாலியல் நோய் வந்துவிட்டதாக கூட நினைத்துக் கொண்டிருந்தனர். மலிவு விலையில் சானிட்டரி நாப்கின்களை உருவாக்க வேண்டும் என எப்போதும் அவர் நினைத்துக் கொண்டிருந்ததால் அவருடைய மனைவியும் பிரிந்து சென்று விட்டார்.

”என் மனைவிக்கு சுகாதாரமான மாதவிடாய் காலத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆரம்பகால இலக்காக இருந்தது. 9999 முறை நான் அந்த முயற்சியில் தோற்றாலும், என்றைக்காவது நான் வெற்றி பெறூவேன் என்பதை மட்டும் அறிந்திருந்தேன்” என தன் பயணத்தை நினைவு கூர்கிறார் அருணாச்சலம் முருகானந்தம்.

அவரது பயணத்தில் மிகவும் கடினமான தருனமாக இருந்தது எது?

“மக்களின் மனநிலையை மாற்றுவது தான் கடினமாக இருந்தது. எந்தவொரு மனிதனும் வறுமையால் இறக்கவில்லை. எல்லாமே அலட்சியத்தால் தான் நடைபெறுகின்றன. காலம்காலமாக நம்பப்பட்டு வரும் சமூக அவலம் மாதவிடாய். அதனை உடைத்து பெண்களை சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்க வைத்ததே கடினமானதாக இருந்தது.
ஆரம்பத்தில் முருகானந்தம் கோயம்புத்தூரில் பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை விற்பனை செய்தார். அதன்பின், சில நாடுகளுக்கு அதனை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தார். புகழ்பெற்ற ‘டைம்ஸ்’ இதழில் 100 புகழ்பெற்ற மனிதர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். 2016-ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை இந்திய அரசு முருகானந்தத்திற்கு வழங்கியது. 

இவருடைய வாழ்க்கைப் பயணம் பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிக்க ‘பேட் மேன்’ என்ற பெயரில் திரைப்படமானது. பேட் மேன் திரைப்படத்தை பால்கி இயக்கினார். 

தொடர்புடைய செய்திகள்

 
 



MGR - Kindle Edition


[X] Close