கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கம் என போக்குக் காட்டி வந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக புதிய உச்சமாய் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கவலையடைந்தனர்.
நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 உயர்ந்து 52,360 ரூபாய்க்கு தங்கம் விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து 6,545 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இன்றைய (ஏப்ரல் 5) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து 52,080 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து 6,510 ரூபாயாக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 6,980 ரூபாயாக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் 55,840 ரூபாயாக விற்பனையாகிறது.
இந்த நிலையில், வெள்ளி விலை ஒரு ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 85.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 85,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை... சிக்காத சிறுத்தையால் தவிக்கும் வனத்துறை!
இன்று முதல் தமிழகத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இந்தியாவில் தேர்தலை சீர்குலைக்க சதி... பாகிஸ்தானியர் உள்பட மூவர் கைது!
பாஜக ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை... அதிர விட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்!
அரசு மருத்துவமனை வாசலில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய்... விரட்டியடித்த 3 டாக்டர்கள் சஸ்பெண்ட்!