தூய சைவ உணவுகளை விரும்புவோருக்காக, பிரத்யேக சேவையினை சொமாட்டோ அறிமுகம் செய்கிறது.
உணவு ரகங்களை துரிதமாக. விநியோகிக்கும் சேவையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்று சொமாட்டோ. அவ்வப்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெறவும், போட்டி நிறுவனங்கள் மத்தியில் தனித்து நிற்கவும் தனித்துவ அறிவிப்புகளை வெளியிடும். அவை பொதுவெளியில் சிலாகிக்கப்படுவதோடு, சர்ச்சைக்கும் ஆளாவதுண்டு.
அந்த வகையில் ’ப்யூர் வெஜ்’ பிரியர்களை கவரும் வகையில் சொமாட்டோ புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி தூய சைவ உணவுகளை கோருவோருக்கு, சைவ உணவுகளை மட்டுமே கையாளும் பணியாளர்கள் மற்றும் உணவுப் பைகளை பயன்படுத்த சொமாட்டோ முடிவு செய்துள்ளது. இதன்படி வழக்கமான சிகப்பு நிறத்திலான ஆடை மற்றும் பைக்கு மாற்றாக, பச்சை நிறை டி ஷர்ட் மற்றும் உணவுப் பையை சொமாட்டோ அறிமுகம் செய்கிறது.
இதன் மூலம் 100 சதவீத உணவைக் கோரும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த முடியும் என சொமாட்டோ நம்புகிறது. இது தொடர்பாக சொமாட்டோ நிறுவனத்தின் சிஇஓ தீபிந்தர் கோயல் வெளியிட்ட பதிவு ஒன்றில், “உலகில் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் உள்ளது. மேலும் அவர்கள் தங்கள் உணவை எப்படி சமைக்கிறார்கள் மற்றும் அந்த உணவை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். எனவே அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ’ப்யூர் வெஜ் மோட்’ வசதி சொமாட்டோவில் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சைவ உணவுக்கான பிரத்யேக வசதி சைவ உணவு விடுதிகள் மற்றும் சைவ உணவாளர்களை இணைக்கும் இடங்களில் மட்டும் முதல் கட்டமாக அறிமுகம் செய்யப்படுகிறது. பின்னர் படிப்படியாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக, ’ஒரு அசைவ ரக உணவுக்கூட, எங்களின் பச்சை உணவுப் பெட்டிக்குள் செல்லாது’ என சொமாட்டோ உறுதி அளித்துள்ளது. இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கலவையாக சமூக ஊடகம் உள்ளிட்ட பொதுவெளியில் எழுந்துள்ளன.
இதையும் வாசிக்கலாமே...
வாடிக்கையாளர்களுக்கு இன்று தான் கடைசி நாள்... பஞ்சாப் வங்கி எச்சரிக்கை!
வாயில் தீ கொண்டு ஓவியர் வரைந்த' தல' படம்... வைரலாகும் மாஸ் வீடியோ!
சவுக்கு சங்கர் மீது சாட்டையைச் சொடுக்கிய உயர் நீதிமன்றம்... வீடியோ வருமானத்தை செலுத்த உத்தரவு!
பெங்களூருவில் மீண்டும் பரபரப்பு... பள்ளி அருகே ஏராளமான வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!
சிட்டிங் எம்பி-க்கள் 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு... பரபரக்கும் திமுக வேட்பாளர் பட்டியல்!