சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 45 ரூபாய் அதிகரித்து 6,135 ரூபாய் என புதிய உச்சம் தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக மார்ச் மாதம் துவங்கியதில் இருந்து தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தது. கிராமிற்கு 25 ரூபாய் குறைந்து 6,090 ரூபாய்க்கு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 48,720 ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
இந்த நிலையில் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.360 அதிகமாகும்.
வெள்ளியின் விலையும் இன்று சற்று உயர்வை சந்தித்துள்ளது. நேற்று 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 30 பைசா உயர்ந்து, 80 ரூபாய் 30 பைசா என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்று வாரத்தின் முதல் நாளில் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை மேலும் குறையும் என பலரும் எதிர்பார்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இறங்கிய வேகத்திலேயே தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்குபவர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்... 50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!
பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!
வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!