பேசவும், கேட்கவும், பார்க்கவும் முடியாத மாற்றுத்திறனாளியான 32 வயது பெண் மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக இன்று வாக்களித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலத் தேர்தலில் இந்தூர் நகர்புறத்தில் வாக்களிக்க 15.55 லட்சம் பேர் தகுதி வாய்ந்தவர்கள். அவர்களில் குர்தீப் கவுர் என்ற பெண்ணும் ஒருவர். 32 வயதான குர்தீப் கவுருக்கு பேசவோ, கேட்கவோ, பார்க்கவோ முடியாத மாற்றுத் திறனாளியாவார். அவர் தனது வாழ்நாளில் முதல் முறையாக இன்று வாக்களித்தார்,
இதுகுறித்து குர்தீப்பின் தங்கை ஹர்பிரீத் கவுர் கூறுகையில், “என் சகோதரி வாழ்க்கையில் முதல் முறையாக இன்று வாக்களித்துள்ளார். இந்த முறை தான் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, எனது சகோதரிக்கு வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க உதவினேன்" என்றார்.
குர்தீப் இந்த ஆண்டு மே மாதம் மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்பட்ட 10-வது தேர்வில் சுயமாகப் படிக்கும் மாணவராக தேர்ச்சி பெற்றபோது வெளிச்சத்துக்கு வந்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, வாரியத்தின் வரலாற்றில் பேசவோ, கேட்கவோ அல்லது பார்க்கவோ முடியாத ஒரு மாணவர் உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறையாகும்.
குர்தீப்பின் சிறப்பு நிலையைக் கருத்தில் கொண்டு, இடைநிலைக் கல்வி வாரிய விதிகளின்படி, தேர்வின் போது, சைகை மொழியில் தெரிந்த உதவி எழுத்தாளர் ஒருவர் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!