நோயாளிகளுக்கு மருந்துச் சீட்டுகளை எழுதி தரும்போது கேப்பிடல் (CAPITAL) எழுத்துகளில் எழுதித்தர வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பணியாற்றும் மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் நோயாளிகளும் புரியும் வகையில் தெளிவாக கேப்பிடல் எழுத்தில்தான் இனி எழுத வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த உத்தரவை தமிழக அரசும் தற்போது பிறப்பித்திருக்கிறது.
இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் பின்பற்ற வேண்டும் எனவும், தனியார் மற்றும் அரசு மருத்துவர்கள் இதன்படியே இனி மருந்துச்சீட்டில் எழுத வேண்டும் எனவும் தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
நோயாளிகளுக்கு புரியாத வகையில் மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் எழுதிக் கொடுப்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. அதனைத் தொடர்ந்து இப்போது மத்திய, மாநில அரசுகள் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையும் வாசிக்கலாமே...
கோடிகளில் நஷ்ட ஈடு?! சர்ச்சையைக் கிளப்பிய நடிகை த்ரிஷாவின் வக்கீல் நோட்டீஸ்!
விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் மனைவியிடம் ரூ. 43 கோடி சுருட்டல்!
கட்டையால் தாக்கி பெண் கொடூரக் கொலை... கல்லூரி மாணவி, தாய் கைது!
ரூ.300 கோடி லஞ்சம்... முன்னாள் ஆளுநர் வீட்டில் சிபிஐ ரெய்டு!
சூப்பர் ஸ்பீடு விஜய்... இன்னும் 10 நாளில் தொகுதிப் பொறுப்பாளர்களை அறிவிக்கிறார்!
ReplyReply allForwardAttendee panel closed