சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு மொத்தம் 6,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் கர்நாடகா உரிய அளவில் காவிரி நதிநீரை பகிர்ந்தளிக்காத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து இப்போது சம்பா பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிரின் விவரம் குறித்து தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22.774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி தண்ணீரை இன்று திறந்துவிட தமிழக அரசு உத்தர பிறப்பித்தது.
இதனால் இன்று மாலை 6 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு 6,000 கன அடியும், குடிநீர் தேவைக்கு 600 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 6,600 கன அடி வீதம் 2 டிஎம்சி வரை மேட்டூர் அணை மின் நிலையம் வழியாகவும் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாகவும் தண்ணீர் திறக்கபட்டது. நீர்வரத்து குறைந்ததால் பாசனத்துக்கான நீர்திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில், 3 மாதங்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
யானை மேல் அம்பாரியில் சாமியார்... எடைக்கு எடை துலாபாரம்... 5,555 கிலோவுக்கு ரூ.10 நாணயங்கள்!
வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி...தனியார் வங்கி நெருக்கடியால் வாலிபர் தற்கொலை!
பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது.. பிரதமர் மோடி அறிவிப்பு!
பாஜக வேட்பாளராகிறார் முன்னாள் டிஜிபி ஜாங்கிட்... ராஜஸ்தானில் சொந்த தொகுதியில் போட்டி!
ஆக்டரோ, டாக்டரோ பாமக போல முடியுமா?: நடிகர் விஜய்யை விமர்சித்த அன்புமணி!